ஹைதராபாத்தில் பள்ளி டாய்லெட்டில் குழந்தையை பெற்றெடுத்த 13 வயது மாணவி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 13 வயது மாணவி பள்ளியின் கழிவறையில் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான மாதபூரில் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வருகிறார். சனிக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவி வகுப்பு நடந்து கொண்டிருக்கையில் தனக்கு வயிறு வலிப்பதாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆசிரியை அவரை கழிவறைக்கு சென்று வருமாறு கூறியுள்ளார். கழிவறைக்கு சென்ற மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சிறுமி குழந்தையுடன் வந்ததை பார்த்த ஆசிரியர்களும், மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி கர்ப்பமாக இருந்த செய்தி அவரது பெற்றோருக்கே தெரியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் குழந்தை பெற்ற செய்தி அறிந்து அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமி தனது வயிற்றை ஸ்கார்ப் வைத்து மறைத்துக் கொண்டே இருந்ததாகவும், வகுப்பில் மடியில் பையை வைத்து அமர்ந்ததாலும் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். முதல்கட்ட விசாரணைக்கு பிறகு போலீசார் தினேஷ் என்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியுடன் தினமும் பள்ளி வரை வந்த தினேஷ் தான் அவரை கர்ப்பமாக்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications