For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரிய வழக்கு.. அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

நாகர்கோவிலை சேர்ந்த சிவகுமார் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அதில் மாசுகட்டுப்பாடு தொடர்பாக ஸ்டெர்லைட்டுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தமிழக அரசு உரிய நோக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

Closure of Sterlite plant: Judges refuse to prosecute immediately

தற்போது உச்சநீதிமன்றத்தில் கோடை விடுமுறைகால அமர்வு செயல்பட்டு வருகிறது. இன்று, நீதிபதிகள் நாகேஷ்வரராவ், சந்தானகவுடர் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க கோரிய மனுதாரர் கோரிக்கையை நீதிபதிகள் புறக்கணித்தனர். கோடை விடுமுறை முடிந்த பிறகு,
ஜூலை மாதம்தான் விசாரிக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

English summary
Judges refuse to prosecute as emergency case suit filed in Supreme Court seeking permanent closure of Sterlite plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X