நிலக்கரி சுரங்க ஊழல்: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை தாக்கல்?

பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை குற்றம் சாட்டியது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த ஊழலில் இதுவரை சி.பி.ஐ. 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஒடிசாவில் தலபிரா 2 மற்றும் தலபிரா 3 என்ற இரண்டு நிலக்கரி சுரங்கங்களை விதிமுறைகளை மீறி தித்யபிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோவுக்கு ஒதுக்கியது தொடர்பாக 14-வது வழக்கினை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் ஆதித்ய பிர்லா குரூப் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஹிண்டால்கோ, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பரேக் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் நிலக்கரித்துறை பொறுப்பு வகித்த பிரதமரும் குற்றவாளிதான் என பி.சி.பரேக் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரதமர் அலுவலகம், ஒடிசா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை தாக்கல் செய்ய இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications