காசு கொடுத்து வாங்கிய சாப்பாட்டில் கரப்பான்பூச்சி! வந்தே பாரத் மூலம் வரும் வாந்தி பேதி!
போபால்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்துப் போன கரப்பான் பூச்சி ஒன்று கிடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இதைப் போன்று பல குற்றச்சாட்டுகள் ரயிலே நிர்வாகத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் ஆட்சிக்கால சாதனைகளில் ஒன்றாக 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த அதிவேக ரயில் சேவையை இந்திய ரயில்வே கடந்த 2019 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரயில் சேவையானது தொலைதூர நகரங்களைப் பயணிகள் விரைவில் சென்றடைவதற்காகவே கொண்டுவரப்பட்டது. சுமார் 800 கிமீட்டர் தூரம் உள்ள நகரங்களிடையே இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிநவீன வசதிகளுடன் வழக்கமான படுக்கை மற்றும் இருக்கைகள் போல் இல்லாமல் இதன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த ரயில்களின் கட்டணம் வழக்கமான ரயில்களில் வசூலிக்கப்படுவதை விட அதிகமாகும்.
இத்தனை வசதிகள் கொண்ட ரயில் என அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இதன் தரம் சரியாக இல்லை என்ற சர்ச்சையும் ஒரு பக்கம் எழுந்தது. கடந்த 2-22 ஆம் ஆண்டு மாடு மோதியதால் ரயிலின் முன்பக்கம் உடைந்து சுக்குநூறானது. அந்தச் செய்தி பரவலாகப் பல விமர்சனங்களை எழுப்பியது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் இந்தச் சம்பவத்தை வைத்து கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இப்போது வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. வந்தே பாரத் விரைவு ரயிலில் போபாலிலிருந்து ஆக்ரா செல்லும் பயணிகள் பயணித்தபோது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மூலம் வழங்கப்பட்ட உணவின் தரம் பற்றி ஒரு வருத்தமான பதிவை சமூக ஊடகத்தில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எக்ஸ் வலைத்தள பதிவரான விடித் வர்ஷினி என்பவர், அவரது மாமாவுக்கும் அத்தையும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்ததாகவும் அப்போது சாப்பாடு வழங்கப்பட்ட உணவில் ஒரு கரப்பான் பூச்சி செத்துக் கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்தப் பதிவைக் கண்ட நெட்டிசன்கள் ரயில் நிர்வாகத்தை மிகக் கடுமையான விமர்சனங்களால் வறுத்தெடுத்து வருகின்றனர்.
வர்ஷினி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 18-06-24 அன்று, என் மாமாவும் அத்தையும் போபாலிலிருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் பயணம் செய்தனர். ஐஆர்சிடிசி இடமிருந்து கொடுக்கப்பட்ட உணவில் 'கரப்பான் பூச்சி'தான் கிடைத்தது. தயவு செய்து இதை விற்பனை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். இதைப்போன்று மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய அவர் @RailMinIndia @ AshwiniVaishnaw @RailwaySeva அதிகாரிகளுக்கு அதை டேக் செய்துள்ளார்.
இதுவரை இந்தப் பதிவை சுமார் 146.9K பார்த்துள்ளனர். நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களைப் பெற்றுள்ளது இவரது பதிவு. இந்தப் புகாரைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி இப்படி நடந்ததற்காக மன்னிப்பு கோரி உள்ளது. இந்த உணவை விற்பனை செய்த சம்பந்தப்பட்ட நபர் மீது "தக்க அபராதம்" விதிக்கப்பட்டுள்ளது என்றும் நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "சார், உங்களுக்கு ஏற்பட்ட மோசமான பயண அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த அபராதம் விதித்துள்ளோம். சமையலின் தரத்தையும் உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் மீதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம்," எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பதிவரின் தொலைப்பேசி எண் மற்றும் பி.என்.ஆர் நம்பரை தங்களுக்குச் செய்தியாக அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது ரயில்வே நிர்வாகம். "உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தயவுசெய்து உங்கள் பி.என்.ஆர் எண் மற்றும் மொபைல் எண்ணைப் பகிரவும்" என்று பின்னூட்டம் போடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ரேவா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த ஒரு பயணி தனது உணவில் "செத்துப்போன கரப்பான் பூச்சி" இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்தார். அந்தத் துயரமான சம்பவத்தைப் பற்றி அவரும் புகாரளித்திருந்தார். அதேபோல் கடந்த ஜனவரி மாதம், புதுதில்லியிலிருந்து வாரணாசிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், தனக்கும் மற்ற சக பயணிகளுக்கும் பயணத்தின் போது கெட்டுப்போன பழைய சாப்பாட்டை வழங்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
இப்படித் தொடர்ந்து வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவு மீது பல புகார்கள் வந்தபடியே உள்ளன. இனியாவது ரயில்வே நிர்வாகம் பயணிகள் உயிருடன் விளையாடுவதைத் தடுத்து நிறுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டுவருமா?
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications