பலாத்காரம் செய்து கொன்றுவிடுவேன்: 2 ஆசிரியைகளை மிரட்டிய கல்லூரி மாணவர்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியையகளை பலாத்காரம் செய்து கொன்றுவிடுவேன் என மிரட்டிய கல்லூரி மாணவரும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி உறுப்பினருமான தஜமுல் ஹக் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சம்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் தஜமுல் ஹக். அவர் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி உறுப்பினராக உள்ளார். மேலும் கல்லூரியின் கலாச்சார விவகாரத் துறை செயலாளராகவும் உள்ளார்.

College student threatens teachers with rape, murder in West Bengal

கல்லூரியில் பல்கலைக்கழக தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹக் கல்லூரியில் உள்ள வகுப்பறை ஒன்றில் சில மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தேர்வு நடக்கும் வேளையில் மாணவர்களுக்கு இங்கு என்ன பேச்சு வேண்டி இருக்கிறது வெளியே செல்லுங்கள் என்று 2 ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹக் அவர்களை பார்த்து உங்களை பாலியல் பலாத்காரம் செய்து கல்லூரியின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இது குறித்து ஆசிரியைகள் கல்லூரி நிர்வாக அதிகாரி மனோஜ் போஜிடம் புகார் அளித்துள்ளனர். அவர் சான்சல் காவல் நிலையத்தில் ஹக் மீது புகார் கொடுத்துள்ளார்.

ஹக் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணென்டு நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+