மோடிக்கு எதிராக களமிறங்கிய நடிகர் ஷியாம் வேட்புமனு தாக்கல் தள்ளுபடி.. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓகே!
வாரணாசி: பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் களமிறங்கிய காமெடி நடிகர் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்புமனு அதிரடியாக இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் ஷ்யாம் ரங்கீலா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது 4 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2014, 2019 தேர்தலில் வாரணாசியில் வென்ற பிரதமர் மோடி 3வது முறையாக களமிறங்கி உள்ளார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று வாரணாசி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரான தென்காசியை சேர்ந்த ராஜலிங்கத்திடம் தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். இவர் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். கடந்த 2014, 2019 தேர்தல்களில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான 28 வயது நிரம்பிய ஷ்யாம் ரங்கீலா, பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக உள்ள பல்வேறு தரப்பினர் ஷ்யாம் ரங்கீலாவின் இந்த செயலை வரவேற்றனர். இந்நிலையில் தான் வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. அதில் ஷ்யாம் ரங்கீலாவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதியின் தேர்தல் அதிகாரியான ராஜலிங்கம் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த 13ம் தேதி வேட்புமனு தாக்கல் அவர் முடிவு செய்தார். ஆனால் சில இடையூறுகளால் அவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதிகாரிகள் சரியான பதிலளிக்காத நிலையில் அவரது வேட்பு மனு தாக்கல் தள்ளிப்போனது. அதன்பிறகு ஷ்யாம் ரங்கீலா நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷ்யாம் ரங்கீலா மனவருத்தம் அடைந்துள்ளார். அதோடு தனது வேட்புமனு தள்ளுபடியான நிலையில் அவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
‛‛நான் வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே பல இடையூறுகள் இருந்தன. இறுதியாக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆனாலும் தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்துள்ளது. தேர்தலை தேர்தல் ஆணையம் விளையாட்டு போல் மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். எனது வேட்புமனுவை ஏற்க விரும்பவில்லை என்றால் மக்கள் முன் ஏன் நடிக்கிறார்கள்? . தற்போது மக்களுக்கு அனைத்து விஷயங்களும் தெளிவாகிவிட்டது.
எனது வேட்புமனு தாக்கலில் எந்த குறையும் இல்லை. நேற்று மதியம் 3 மணிக்கு நான் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கபட்டேன். இன்று ஆனால் வேட்புமனுவுக்கு தேவையான சத்தியப் பிரமாணப் பத்திரம் காணவில்லை என்று தேர்தல் அதிகாரி என்னிடம் கூறினார். நாட்டின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது'' என பரபரப்பாக கூறியுள்ளார். இருப்பினும் பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்ளிட்டவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
வாரணாசி லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் 55 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டு 36 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனு நிராகரிக்கப்பட்ட ஷ்யாம் ரங்கீலா தொடக்கத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தார். அதாவது கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஷ்யாம் ரங்கீலா அதன்பிறகு பாஜகவை கலாய்க்க தொடங்கினார். அதன்பிறகு அவரது நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்குவதாக அறிவித்து மனுத்தாக்கல் செய்தார். ஆனால் தற்போது அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications