வணிக கேஸ் சிலிண்டர் விலையும் குறைந்தது.. அந்த்யோதயா அன்ன யோஜனாவில் அடித்த ஜாக்பாட். பாருக்கு பாருங்க
பானாஜி: சமீபத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை குறைக்கப்பட்ட நிலையில், வணிக கேஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் தென்பட்டுள்ளது. அத்துடன், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு, கோவா மாநிலம் குட்நியூஸ் அறிவித்துள்ளது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், அதேபோல, வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ கிலோ எடையிலும் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

அந்த நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் மாதத்தின் முதல் நாளில் காஸ் சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன..
சிலிண்டர் விலை: கடந்த ஆகஸ்ட் மாதம், வீட்டு சிலிண்டர் 1118.50 ரூபாய்க்கும், வணிக சிலிண்டர் 1852.50 ரூபாய்க்கும் விற்பனையாகின. இப்படிப்பட்ட சூழலில், மத்திய அரசு 4 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த 30ம் தேதி வீட்டு சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்தது.
இதையடுத்து சமையல் காஸ் சிலிண்டர் 918.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.. அந்தவகையில், நேற்று வணிக சிலிண்டர் விலை 157.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1695 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது... வணிக சிலிண்டர் விலை ரூ.157.50 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. இந்நிலையில், இன்னொரு அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை: கடந்த நாட்களில் வீட்டு கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்ததையடுத்து, கோவா அரசும் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதன்படி, மாநில அரசின் அறிவிப்புக்கு பிறகு, அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ரூ.428க்கு சிலிண்டர் கிடைக்க போகிறது.. முதலமைச்சரின் நிதி உதவித்திட்டத்தின் கீழ், கோவா மாநிலத்தில், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு சிலிண்டரில் ரூ.275 மானியத்தை மாநில அரசு வழங்கும்.
இதுகுறித்து கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் சொல்லும்போது, "எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்..
உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மையத்தின் 200 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.. இதைதவிர, தவிர, AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 275 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்.
கோவா மாநிலம்: கோவா மாநிலத்தை பொறுத்தவரை, 11,000க்கும் மேற்பட்டவர்கள் அந்தியோதயா கார்டுகளை வைத்திருக்கிறார்கள். இப்போது, 200 ரூபாய் உஜ்வாலா யோஜனா மானியமும் + ரூ.275 மானியமும் என டபுள் ஜாக்பாட்டை பெறப்போகிறார்கள். அப்படியானால், மொத்தமாகவே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.475 மானியம் வழங்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications