20 நாட்களில் கூடங்குளம் அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி: இம்முறை டெல்லியில் இருந்து நா.சா.
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்களில் மின் உற்பத்தி 300 மெகாவாட்டாகவும், அதைத் தொடர்ந்து 5 நாட்களில் 500 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும்.
கூடுதலாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்குமாறு அணு உலை கட்டுபாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்படும். அனுமதி கிடைத்த உடன் மின் உற்பத்தி திறன் முதலில் 700 மெகாவாட்டாகவும் அடுத்த 20 நாட்களுக்குள் முழு இலக்கான 1000 மெகாவாட்டாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications