Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.262 கோடி கிடைத்தும் போச்சே.. அமெரிக்காவில் பலியான மாணவி குடும்பத்தில் அடுத்த சோகம்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: அமெரிக்காவின் சியாட்டில் நகரில், போலீஸ் கார் மோதி பலியான இந்திய மாணவி ஜானவி கண்டுலா மரணத்துக்கு இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு ரூபாய் 262 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நேரத்தில் அந்த மாணவியின் குடும்பத்தில் சோக நிகழ்வு அரங்கேறி உள்ளது. கடந்த 10 ஆம் தேதியன்று ஜானவியின் தந்தை உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஜானவி கன்​டுலா, அமெரிக்​கா​வின் சியாட்​டில் நகரில் உள்ள நார்த் ​ஈஸ்​டர்ன் பல்​கலைக்கழகத்​தில் முது​நிலை தகவல்​ தொழில்​நுட்பப் படிப்பு படித்து வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சியாட்டில் நகரில் அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த ஒரு போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது பலமாக மோதியது.

US Police student india

அமெரிக்காவில் இந்திய மாணவி பலி

இதில் ஜானவி கன்​டுலா உயி​ரிழந்​தார். குறிப்பிட்ட அந்தப் பகுதியில் வாகனங்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதி உள்ள நிலையில், காவல் அதிகாரி கெவின் டேவ் தனது வாகனத்தை மணிக்கு 119 கி.மீ வேகத்தில் அசுரவேகமாக ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது. இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்​பான வழக்கு சியாட்​டில் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. போலீஸ் வாக​னம் சைரன் ஒலி மற்​றும் அவசர​கால விளக்​கு​களை எரிய​விட்​டு​தான் சென்றது என அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஜான்வி ஒரு புத்திசாலி மாணவி என்றும், அவரது மற்றும் குடும்பத்தினரின் எதிர்காலம் மிகக் கோரமான முறையில் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ஜானவி குடும்பத்தினர் தரப்பில் வாதிட்டனர்.

ரூபாய் 262 கோடி இழப்பீடு

29 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலையில் நகர நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது. அதாவது, ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தொகையில் பெரும் பகுதியை சியாட்டில் நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்கும் என்றும், மீதமுள்ள தொகையைச் சியாட்டில் மாநகராட்சி நேரடியாக வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வாக​னத்தை கவனக் குறை​வாக ஓட்​டிய கெவின் டேவ் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்​கப்​பட்டது. விபத்து நடந்த போது, இந்த சம்​பவத்​துக்கு சிறிய தொகை இழப்பீ​டாக வழங்க வேண்​டி​யிருக்​கும் என சிரித்​துக் கொண்டு இழிவாகக் கருத்து தெரி​வித்த மற்​றொரு போலீஸ் அதி​காரி டேனியல் ஆட்​ரர் என்​பவரும் பணி நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

மாணவி குடும்பத்தில் சோகம்

சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு சியாட்டில் நகர அதிகாரிகள் மாணவின் ஜானவியின் குடும்பத்திற்கு இழப்பீடாக 29 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 262 கோடி) வழங்க முடிவு செய்துள்ளனர். ஆனால், ஒரு துயரமான சம்பவமாக, ஜானவியின் தந்தை, கண்டுலா ஸ்ரீகாந்த் உயிரிழந்துள்ளார்.

ஜானவி தந்தை மறைவால் நிலைகுலைந்த குடும்பம்

போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிய கண்டுலா ஸ்ரீகாந்த், மகளின் மரணத்துக்குப் பிறகு பணிக்குச் செல்லவில்லை. அவர் நீண்ட விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10 அன்று காலமானார். இதன் காரணமாக அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனையை எதிர்கொண்டுள்ளனர்.

தமது மகள் பலியானதற்கு இழப்பீடாக ரூபாய் 262 கோடி வழங்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க பட்டத்துடன் திரும்பும் மகள் இல்லை, நீண்டகாலமாக நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையும் இல்லை என ஜானவியின் குடும்பமே மொத்தமாக நிலை குலைந்து போயுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+