தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர். 'ஹிட்லர்'.... ட்விட்டரில் விமர்சித்த சந்திரபாபு மகன் மீது புகார்!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை ஹிட்லர் என்று ட்விட்டரில் விமர்சித்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் (டி.ஆர்.எஸ்.) ஹைதராபாத் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் ரேவநாத் ரெட்டி அவரது வீட்டில் மர்ம நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது பற்றி தமது ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த லோகேஷ், "டி.ஆர்.எஸ். குண்டர்களால் ரேவநாத் ரெட்டி தாக்கப்பட்டுள்ளார். அரசு ரவுடிகளால் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஹிட்லர் முதல்வர் ஆட்சி செய்கிறார்' என்று கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
Revanth Reddy attacked by TRS goons. Government run by rowdies, Law & Order out of control. #HitlerCM is ruling!
— Lokesh Nara (@naralokesh) November 14, 2014 லோகேஷின் விமர்சனத்தால் கொந்தளித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியினர் ஹைதராபாத் எல்.பி. நகர் காவல்நிலையத்துக்குச் சென்றனர். லோகேஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் லோகேஷ் மீது வி. ராமகிருஷ்ணா கவுட் என்ற டி.ஆர்.எஸ். தலைவர் புகார் கொடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்தும் சந்திரசேகர் ராவை லோகேஷ் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications