Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய பெண்களிடம் பெருகியுள்ள 'அந்த' விழிப்புணர்வு.. சர்வேயில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இந்திய பெண்களிடம் பெருகியுள்ள அந்த விழிப்புணர்வு..

    டெல்லி: இந்திய பெண்களிடையே பாதுகாப்பான உடலுறவு வழக்கம் பெருகியுள்ளதாக அரசின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

    2015-16ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், கருத்தடை மற்றும் பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    திருமணமாகாத ஆனால் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்கள் மற்றும் திருமணமான ஆண், பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வில் வெளியான சில சுவாரசிய தகவல்கள் இதோ.

    ஆணுறை விழிப்புணர்வு

    ஆணுறை விழிப்புணர்வு

    திருமணமாகாத ஆனால் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களிடையே, கடந்த பத்தாண்டுகளில், ஆணுறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு 2 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 20-24 வயதுக்கு நடுவேயான பெண்கள்தான் அதிக அளவுக்கு தங்கள் பார்ட்னர் ஆணுறை அணிந்து செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பெண்கள் விஷயம்

    பெண்கள் விஷயம்

    8 ஆண்களில் 3 பேர் பாதுகாப்பான உறவு என்பது பெண்கள் தொடர்புடையது மட்டுமே என்ற எண்ணம் கொண்டவர்களாக உள்ளனர். தேவையற்ற கர்ப்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அதை பெண்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற மனநிலையில் உள்ளவர்கள் இவர்கள்.

    விவரம் தெரிகிறது

    விவரம் தெரிகிறது

    15-49 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களில் திருமணமான 99 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான உறவு வழிமுறைகளில் ஏதாவது ஒன்று பற்றியாவது தெரிகிறதாம். இது மகிழ்ச்சியான விஷயம். தெரிந்திருந்தாலும் கூட அனைவருமே அப்படி செயல்படுகிறார்களா என்றால் இல்லை. 10 சதவீதம் திருமணமான பெண்கள்தான் கருத்தடுப்பு முறைகளுடன் உறவு கொள்கிறார்களாம்.

    பழைய முறை

    பழைய முறை

    பெரும்பாலான பெண்கள் இன்னும் மரபுரீதியான கருத்தடுப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள். மாதவிடாய் சுழற்சியை கணக்கிட்டு உடலுறவு கொள்வது, உச்ச கட்ட நேரத்தில் ஆண் தனது உயிரணுவை, பெண்ணுக்குள் செலுத்தாமல் தவிர்ப்பது போன்ற வழிமுறைகளைதான் பெரும்பாலான தம்பதிகள் பின்பற்றுகிறார்களாம்.

    ஆணுறை முக்கியம்

    ஆணுறை முக்கியம்

    ஆணுறையை சரியாக பயன்படுத்தினால் கர்ப்பத்தை தவிர்க்கலாம் என 61 சதவீத ஆண்கள் நம்புகிறார்கள். கருத்தடை சாதனங்களை மணிப்பூர், பீகார் மற்றும் மேகாலயா மாநிலங்களில் குறைவாக பயன்படுத்துகிறார்கள். பஞ்சாப் 76 சதவீதத்துடன் இந்த விஷயத்தில் டாப்பில் உள்ளது. சீக்கிய, பவுத்த பெண்களில் 65 சதவீதம் பேர் நவீன கால கருத்தடை முறைகளான ஆணுறை, காப்பர் டி, மாத்திரை போன்ற ஏதாவது ஒரு விஷயத்தை பின்பற்றுகிறார்களாம். ஆனால் முஸ்லிம் பெண்களில் இந்த எண்ணிக்கை 38 சதவீதமாக உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+