லோக்சபா தேர்தலில் வெல்வோம்! பொருளாதாரத்தை மீட்போம்: ராஜ்நாத்சிங் நம்பிக்கை!
மும்பை: லோக்சபா தேர்தலில் வென்று பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங், 2014ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 272-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

272க்கும் அதிகமான இடங்களை எங்களுக்குக் கொடுங்கள். இந்தியாவின் பெருமையை உலகளவில் மீட்டெடுக்கும் வகையில் பொருளாதார கொள்கைகளுடன் ஆட்சி அமைப்போம். நாட்டின் பொருளாதாரத்தை நாங்கள் மீட்டெடுப்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறும் என்றார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரை அறிவித்ததில் அத்வானியின் அதிருப்தி பற்றிய கேள்விக்கு எந்த பதிலும் ராஜ்நாத்சிங் அளிக்கவில்லை.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications