For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'விஷத்தன்மை' பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங். புகார்!

By Mathi
Google Oneindia Tamil News

Cong complains to EC over Modi’s ‘poison’ remark
டெல்லி: காங்கிரசார் அதிக விஷத்தன்மை கொண்டவர்கள் என பேசிய குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

ராஜஸ்தான் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, 'பதவி என்பது விஷம் போன்றது என சோனியா, தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி பேசியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து வருகிறது. அப்படியானால் நீண்டகாலமாக விஷத்தை சுவைத்து வந்தது யார் என்பது தெரிகிறதா?

காங்கிரஸ் கட்சிதான் பதவி ஆசை என்னும் விஷத்தை கொண்டுள்ளது. அப்படியிருக்கும் போது காங்கிரசை விட அதிக விஷத்தன்மை கொண்டவர்கள் யார் இருக்க முடியும்? பாரதிய ஜனதா கட்சியில் விஷத்தன்மை கொண்டவர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் விஷத்தை கொடுப்பதும் இல்லை. உண்மை என்னவென்றால் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் தான் விஷத்தன்மை கொண்டவர்கள் என்று பேசியிருந்தார்.

மோடியின் இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளிததுள்ளது. மோடி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் அப் புகாரில் வலியுறுத்தியுள்ளது.

English summary
The Congress has approached the Election Commission once again with a complaint against BJP's prime ministerial face Narendra Modi. It demanded "stern action" against Modi for his remarks that the Congress "spreads poison", a statement which it claimed was a violation of the model code of conduct.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X