நரேந்திர மோடியின் ‘கழிவறை’ பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: ராஜீவ் சுக்லா

குஜராத் மாநில முதலமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி, நேற்று முன் தினம் டெல்லியில் உள்ள தியாகராஜா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ‘என்னை எல்லோரும் இந்துத்வா தலைவர் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் நான் எத்தகைய சிந்தனை கொண்டவன் என்பதை இப்போது சொல்கிறேன். முதலில் கழிவறை கட்டவேண்டும். அதன்பிறகுதான் சாமி கும்பிட கோவில் கட்ட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.
கழிவறை பற்றிய மோடியின் பேச்சை மற்ற கட்சிகள் சர்ச்சைக்குரிய ஒன்றாக எடுத்துக் கொண்டுள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா இது குறித்து கூறியதாவது, ‘நரேந்திர மோடி இந்துத்வா தலைவர் அல்ல. இந்துக்களுக்காக எதுவும் செய்யவும் இல்லை. ஆனால் இந்துக்களை தவறாக வழிநடத்தி அவர்களுடைய வாக்குகளை பெறும் நோக்கத்தில் அவர் இந்துத்வா தலைவராக முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முன்பு ஒருமுறை பேசும் போது, கிராமங்களில் கோவில்கள் கட்டுவதை விட முதலில் கழிவறைகள்தான் கட்ட வேண்டும் என்று கூறினார். அப்போது அதை வன்மையாக கண்டித்த பாரதீய ஜனதா, அவர் தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியது. ஆனால் இப்போது நரேந்திர மோடி பேசி இருப்பது பற்றி பாரதீய ஜனதா வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications