மேகாலயாவில் நள்ளிரவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
ஷில்லாங்: மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள காங்கிரஸ் நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
மேகாலயா சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸை எதிர்த்த தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் மாநில கட்சிகள் கணிசமான இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

மாநில கட்சிகளுடன் பேச்சு
பாஜக 2 இடங்களில் வென்றுள்ளது. மேகாலயாவில் பெரும்பான்மைக்கு தேவை 31 எம்.எல்.ஏக்கள். இது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பாஜகவும் தீவிரம்
அதேநேரத்தில் பாஜகவோ தேசிய மக்கள் கட்சி தலைமையில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைக்க முயற்சிக்கிறது. கோவாவில் பெரும்பான்மையே இல்லாத நிலையில் திடீரென பாஜக ஆட்சி அமைத்தது.

ஆளுநருடன் சந்திப்பு
அதேபோல மேகாலயாவிலும் பாஜக முயற்சிக்கக் கூடும் என்பதால் காங்கிரஸ் உஷாராகவே இருந்து வந்தது. நள்ளிரவில் ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

சட்டசபை தலைவர் தேர்வு
இதையடுத்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications