பெட்ரோல், டீசல் கலால் வரி.. மக்களிடம் மோடி அரசு கொள்ளையடிக்கிறதாம்! சிபிஐ விசாரணை கோரும் காங்கிரஸ்!
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் மத்திய பாஜக அரசு பொதுமக்களிடம் கொள்ளையடிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி) ஆய்வு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பல மாதங்களாக மக்களிடையே நிலவி வருகிறது.

பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு
2024ம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிந்துள்ள நிலையில் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் விளாசல்
இந்லையில், இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி ஏதும் உள்ளதா என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்கள் சுரண்டப்படுகிறார்கள். ஒருபுறம் மோடி அரசு வரிச்சுமையை அதிகரித்து மக்களைச் சுரண்டுகிறது என்றால் மறுபுறம், அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. இது வெளிப்படையான ஒரு பொருளாதாரச் சுரண்டல்.
2014-லும் - இப்போதும்
கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.9.20 ஆகவும், டீசலுக்கு ரூ.3.46 ஆகவும் இருந்தது. அது தற்போதைய மோடி அரசில் பெட்ரோலுக்கு ரூ.19.90 ஆகவும், டீசலுக்கு ரூ.15.80 ஆகவும் இருக்கிறது. இது முறையே 357 சதவீதம் மற்றும் 54 சதவீதம் அதிகம்.
கடந்த 11 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறையின் மூலம் அரசு ரூ.39.54 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும்
கடந்த 2014 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயின் விலை பேரல் 108 அமெரிக்க டாலர்களாக இருந்தது. தற்போது அது 65.31 அமெரிக்க டாலராக உள்ளது. அதாவது 40 சதவீதம் மலிவு இது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை விட மோடி அரசில் அதிகமாக உள்ளது.
2014 ஆம் ஆண்டில், டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் ரூ.94.77க்கும், டீசல் ரூ.87.67க்கும் விற்பனையாகிறது. பொதுமக்கள் வெளிப்படையாகக் கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.
சிபிஐ, சிவிசி விசாரிக்க வேண்டும்
அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் மூலமாக கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. ஆனால் பொதுமக்களோ பெட்ரோல் டீசல் விலை உயர்வால் கொள்ளையடிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமானது.
அரசின் கொள்கைகள் இந்தத் தனியார் நிறுவனங்ளுக்கு எவ்வாறு பயனளித்தன என்பதை சிஏஜி தணிக்கை செய்யவேண்டும். இதில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டப்பட்டதா, கூட்டுச்சதி உள்ளதா என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) மற்றும் சிபிஐ விசாரிக்க வேண்டும். பொதுமக்கள் பணத்திற்கு கணக்கு காட்டப்பட வேண்டும், அரசின் பொறுப்புகூறல் நிலைநிறுத்தப்பட வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா?











Click it and Unblock the Notifications