காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமார் 18 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன.
இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தள், பஞ்சாப் லோக் காங்கிரஸ் (அமரீந்தர் சிங்) உள்ளிட்டவை போட்டியிட்டன. இதன் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம் ஆத்மி மகிழ்ச்சியில் உள்ளது. பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஆம் ஆத்மி தேர்தலை சந்தித்தது.

மாற்றத்திற்கான தேர்தல்
இந்த முறை மாற்றத்திற்கான தேர்தல் என ஆம் ஆத்மி கூறி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் இந்த நேரத்தில் நேற்றைய தினம் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஹரீஷ் சவுத்ரி, அஜய் மக்கான், சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி தோல்வி
அதில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து ஆட்சி அமைக்க தவறும் பட்சத்தில் குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் மற்றும் மற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் நேற்று முன் தினம் இரவு அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில், பல காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக அமரீந்தர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குதிரை பேரம்
இதனால் குதிரை பேரத்திற்கு வழி வகுத்து விடுமோ என காங்கிரஸ் அச்சம் கொள்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் முட்டாள்தனம் என சிரோமணி அகாலி தள் கூறுகிறது. இவையெல்லாம் தடை செய்யப்பட வேண்டும். ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்கள் வாயிலாக ஆதாயம் பெற நினைக்கிறார்கள். எனவே அந்த நம்பிக்கையை இந்த தேர்தல் உடைக்கும் என அகாலி தளம் கூறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications