கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் கையிலெடுத்தது காங்கிரஸ்!
மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: மணிப்பூர், கோவா மற்றும் மேகாலயாவில் பாஜக பயன்படுத்திய ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கையிலெடுத்துள்ளது.
கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைகிறது. கர்நாடக தேர்தல் முடிவில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக பாஜக முன்னிலை பெற்ற இடங்கள் கணிசமாக குறைந்தது. சற்றுமுன் நிலவரப்படி பாஜக 94 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

குமாரசாமி முதல்வர்
இந்நிலையில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் ஜேடிஎஸ் தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. தேவகவுடாவின் மகன் குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளது.

அதிக இடங்களில் வெற்றி
இன்று மாலை காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிகள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலைக் காட்டிலம் பாஜக இம்முறை அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் அதிரடி
ஆனால் அதனை அனுபவிக்க முடியாதபடி, பாஜக ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தட்டிப்பறித்த பாஜக
கடந்த ஆண்டு மணிப்பூர், மேகாலயா மற்றும் கோவா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. ஆனால் அவர்களிடம் இருந்து ஆட்சியை தட்டிப் பறித்தது பாஜக.

பாஜக ஃபார்முலா
இந்நிலையில் அதே ஃபார்முலாவை கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை கையிலெடுத்துள்ளது. இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் அதிரடி திருப்பங்களுடன் அனல் பறக்கிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications