சத்தீஸ்கர் ரிசல்ட்டுக்கு முன்பே ஆக்ஷன் ரெடி.. உள்ளடி வேலை பார்த்தவர்களை ‘கட்டம்’ கட்டும் காங்கிரஸ்!
ராய்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, தேர்தல் முடிவுகளுக்கு கட்சிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகளை 'கட்டம்' கட்டும் வேலைகள் தொடங்கியுள்ளதாம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இதர 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் பூபேஷ் பாகெல் உட்பட 958 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,800-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக 76.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், முடிவுகள் குறித்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன. கடந்த நவம்பர் 18 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி, தேர்தல் தொடர்பாக பெரிய கூட்டங்களை நடத்தியது.
எந்தெந்த சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள், எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சிக்கலில் உள்ளனர் என வேட்பாளர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கப்பட்டது. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் லிஸ்ட் பெறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மதிப்பாய்வின் போது, பல வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட தலைவர்கள் மீது பல்வேறு புகார்களை கூறியுள்ளனர். மாநில பொறுப்பாளர் குமாரி செல்ஜா மற்றும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளனர்.
இந்த தேர்தலில் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட சில கிளர்ச்சியாளர்கள் சில இடங்களில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் கெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று கருதப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
"சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். சத்தீஸ்கரில் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். சில புகார்கள் வந்துள்ளன. சில வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் புகார் அளித்துள்ளனர். புகார்களை கட்சி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. புகார்கள் விசாரிக்கப்படும். தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் தெரிவித்துள்ளார்.
"காங்கிரசில் எவ்வளவு உட்கட்சி பூசல் உள்ளது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. கட்சி பல துண்டுகளாக பிளவுபட்டுள்ளது. காங்கிரஸின் விமர்சனம் சத்தீஸ்கரின் கருத்துக்கணிப்பு என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதை இது காட்டுகிறது. அவர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள், அவர்களின் அழிவும் நிச்சயம்" என்று பாஜக செய்தி தொடர்பாளர் கேதார் குப்தா கூறியுள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications