பாலியல் தொல்லை.. காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி கைது
டெல்லியில் பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் ஒருவர் அவருடன் பணியாற்றிய பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்தார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர் சிராஜ் பட்நாயக். டெல்லியைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவில் தன்னுடன் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார் என்ற புகாரின் பேரில் டெல்லி போலீஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஒரு மணி நேரத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், அந்த பெண் டெல்லி போலீஸ் கமிஷர் அமுல்யா பட்நாயக்கிற்கும் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரில், குற்றம் சாட்டப்பட்ட சிராஜ் பட்நாயக் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். பல சமயங்களில் அவர் எனது தனிப்பட்ட விஷயங்களைக் குறிப்பிட்டு எல்லை மீறியுள்ளார். ஒழுங்கீனமாக நடந்துகொண்டுள்ளார் என்று அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் சிராஜ் பட்நாயக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு மேலாளராக இருந்தபொது அந்த பெண் அதன் உறுப்பினராக இருந்துள்ளார். அந்த நேரத்தில்தான் இது நடந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
Regarding the allegations: The Social Media Dept has set up an Internal Committee and as per the provisions of the Act the Internal Committee is already investigating the complaint. In view of confidentiality of the investigation no further comments will be made.
— Divya Spandana/Ramya (@divyaspandana) July 31, 2018
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் மீடியா அணியின் தலைவர் திவ்யா ஸ்பந்தனா செய்தியாளர்களிடம் கூறுகையில், சிராஜ் பட்நாயக்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு என்பதை முதன்முறையாக கேள்விப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர், அவருடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், புகார் அளித்த பெண்ணை கட்சி சார்பில் தொடர்பு கொண்டோம். ஆனால், பட்நாயக் குற்றவாளி என நம்புதற்கு காரணங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாலியல் புகார் அளித்த பெண், தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகவும் உடல்நல விஷயங்களுக்காகவும் காங்கிரஸ் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவிலிருந்து ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications