இது இயற்கையான வெள்ளமே இல்லை.. அப்படியே தமிழக எதிர்க்கட்சிகள் போலவே பேசும் கேரள காங்!
திருவனந்தபுரம்: இது இயற்கையான வெள்ளமே இல்லை. அணைகளை இடதுசாரிகள் அரசு முறையாக பராமரிக்காததே இந்த பேரிடருக்கு காரணம் என்றும் நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
கேரளத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் கடவுளின் தாய் வீடு என்று வர்ணிக்கப்படும் அந்த தேசமே நீரில் தத்தளித்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.

சுமார் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டதாக கேரள முதல்வர் அறிவித்தார். மேலும் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துவிட்டதால் ஏராளமான வெள்ள பெருக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இது இயற்கையான வெள்ளம் அல்ல என்றும் இது மனித தவறால் ஏற்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் போர் கொடி உயர்த்தியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே அணைகளில் உள்ள நீரை வெளியேற்றியிருந்தால் வெள்ளத்தை தவிர்த்திருக்க முடிந்திருக்கும்.
அணைகளை முறையாக பராமரிக்காததாலும் தவறான நிர்வாக திறமையாலும் இதுபோல் பேரழிவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விட்டது. கேரளாவில் உள்ள அணைகளை பராமரிக்கும் கேரளா மின்சார வாரியம் எந்த தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளது.
எனவே இந்த வெள்ள விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்துள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications