ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கம்.. கோவிந்த் சிங் நியமனம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இவருடன் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சச்சினுக்கு பதிலாக கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா என்பவர் ராஜஸ்தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இவருடன் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சச்சினுக்கு பதிலாக கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா என்பவர் ராஜஸ்தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூருக்கு வெளியே இருக்கும் ஃ பேர்மான்ட் ஓட்டலில் இன்று இரண்டாவது முறையாக நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றக் கூட்டத்திலும் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப் போர் தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற அச்சத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. தனக்கு 30 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக சச்சின் கூறி வருகிறார். ஆனால், டெல்லியில் மானேசர் ஓட்டலில் முகாமிட்டு இருக்கும் சச்சினுடன் வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இன்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருந்தது. மேலும், காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. நேற்று சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம், அகமது பட்டேல் ஆகியோர் பேசியபோதும் சச்சின் மடியவில்லை.
இதனால், இன்று இருதரப்புக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது வரைக்கும் சச்சின் பைலட்டுக்கு 15 முதல் 17 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று சட்டமன்றக் கூட்டம் துவங்குவதற்கு முன்பு, சச்சின் ஆதரவாளர்கள் ட்வீட் செய்து இருந்தனர். அதில், ''காங்கிரஸில் இருப்பது அசோக் கெலாட்டிற்கு அடிமையாக இருப்பதற்கு சமம்'' என்று தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications