கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு
பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டிகே சிவகுமார், எம்பி பாட்டீல், ஜி பரமேஸ்வரா உள்ளனர்.
பெங்களூரில் காாங்கிரஸ் கட்சியின் சார்பில் வென்ற 136 எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகி இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை முடிவு செய்யும் என்று அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அடுத்த முதல்வர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கட்சியின் மேலிடக் குழு கருத்து கேட்கும் என்றும் அதன்பிறகு காங்கிரஸ் தலைவர், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமலிங்கா ரெட்டி கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவும் ஆதரவு அளித்துள்ளார். ஹர்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட லதா மல்லிகார்ஜூன் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க எம்.எல்.ஏக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இதனிடையே, டிகே சிவக்குமார் தான் முதல்வர் என்று அங்கு திரண்டுள்ள அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
சித்தராமையாவை தொடர்ந்து கர்நாடகா முதல்வர் பதவிக்கான யுத்தத்தில் குதித்த டிகே சிவகுமார் ஆதரவாளர்கள்
#WATCH | Karnataka Congress President DK Shivakumar's supporters put up a poster outside his residence in Bengaluru, demanding DK Shivakumar to be declared as "CM" of the state. pic.twitter.com/N6hFXSntJy
— ANI (@ANI) May 14, 2023
சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி தரக் கோரி அவரது ஆதரவாளர்கள் தொடங்கிய போஸ்டர் யுத்தம்
#WATCH | Supporters of senior Congress leader Siddaramaiah put up a poster outside Siddaramaiah's residence in Bengaluru, referring to him as "the next CM of Karnataka." pic.twitter.com/GDLIAQFbjs
— ANI (@ANI) May 14, 2023
புதிய சட்டசபையில் சமூகங்களின் பிரதிநிதித்துவம்:
லிங்காயத்துகள்: காங்கிரஸ் 45 பாஜக- 20 மஜத-2 சுயேட்சை-1 கேஆர்பிபி-1 ஒக்கலிகா கவுடா: காங்கிரஸ்- 27 மஜத-12 பாஜக-10 சுயேட்சை-1 எஸ்கேபி-1 எஸ்டி: காங்கிரஸ்-14 மஜத-1 எஸ்சி (தலித்துகள்) காங்கிரஸ் 22 பாஜக 12 மஜத-3 குருபா காங்கிரஸ்- 8 பாஜக-3 முஸ்லிம்கள் காங்கிரஸ் 9 பிராமணர்கள் பாஜக- 6 காங்கிரஸ் 3 மஜத-1 மராத்தாக்கள் காங்கிரஸ்-4 பாஜக-2
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications