ம.பியில் காங். எம்.பி. மீனாட்சி நடராஜனை முற்றுகையிட்டு காங்கிரஸார் போராட்டம்

மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தல் டிக்கெட் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக அங்கு காங்கிரஸ் கட்சி கலகலத்துக் கிடக்கிறது. ஒரு தொண்டர் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் தீவிர ஆதரவாளரான எம்.பி. மீனாட்சி நடராஜனை காங்கிரஸ் கோஷ்டியினர் முற்றுகையி்ட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் பெரும் கோபத்துடன் முற்றுகையிட்டதால் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் ஓடி தப்ப வேண்டியதானது. நீமுச் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அவரது காரை நூற்றுக்கணக்கான காங்கிரஸார் சூழ்ந்து விட்டனர். அத்தனை பேரும் ராஜ்குமார் அஹிர் என்ற காங்கிரஸ் தலைவரின் ஆதரவாளர்களாம்.
அஹிருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்தே மீனாட்சியைக் குறி வைத்தனர் அவரது ஆதரவாளர்கள்.
பின்னர் மீனாட்சி நடராஜன் பலத்த பாதுகாப்புடன் காந்தி பவனுக்கு காரில் அழைத்து வரப்பட்டார். ஆனால் அங்கு ஒரு மணி நேரம் அஹிரின் ஆதரவாளர்கள் சுற்றி நின்று கோஷமிட்டபடி இருந்ததால் மீனாட்சியால் வெளியேற முடியாமல் போனது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications