திராவிட நாடு...வேண்டாத கோஷம் - பொங்கிய சசிதரூர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
தனி திராவிட நாடு போன்ற தேச விரோதக் கொள்கைகளைத் தூண்ட வேண்டாம் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருவனந்தபுரம் : மாட்டிறைச்சிக்கு எதிராக தனி திராவிட நாடு போன்ற தேசவிரோதக் கொள்கைகளைத் தூண்ட வேண்டாம் என எனது சக தென்னிந்திய மக்களிடம் கேட்டுக்கொள்வதாக திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் வறுத்து வருகின்றனர்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யத் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் #Dravidanadu என்ற ஹேஷ்டேக் நேற்று மாலை முதல் ட்ரெண்டாகி வருகிறது. தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்து தனி திராவிட நாடு என்ற கருத்தை முன்வைத்து பலரும் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேகில் பதிவு செய்து வருகிறார்கள்.
|
சசிதரூர்
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மத்திய அரசு மீதான விமர்சனங்கள் சரிதான் என்று கூறியுள்ளார்.

வேண்டாம் திராவிட நாடு
ஆனால் தனி திராவிட நாடு போன்ற தேச விரோத கொள்கைகளைத் தூண்ட வேண்டாம். நாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை மேம்படுத்துவோம் என்றும் சசிதரூர் கூறியுள்ளார். இவரின் கருத்துக்கு அவரது பக்கத்தில் பலர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
|
தென்மாநிலங்கள் புறக்கணிப்பு
அதில், இந்தியா முன்னேறுகிறது, ஆனால் ஆட்சி செய்யும் அரசுகள் அனைத்தும் தென் இந்தியாவை புறக்கணிக்கிறது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் ஒரு வலைபதிவர். மற்றொரு வலைபதிவர் தேசியவாதம் என்ற கொள்கையில் இருந்து நாடு விலகிச் செல்லும் போதும் தனி நாடு கோருவதில் எந்நதத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
|
விமர்சனங்கள்
சமஉரிமை, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை நியாயமானதே என்று மற்றொரு நெட்டிசன் சசிதரூர் கருத்துக்கு எதிர் பதிவை டூவிட்டியுள்ளார். அதே சமயம் சிலர் பிரிவினை நோக்கத்துடன் திராவிட நாடு கோரிக்கையை எடுத்துவைப்பதாகவும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர் டுவிட்டரில் தீவிரமாக செயல்படுபவர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications