அதிர்ஷ்டம்! காங்.,கில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினருக்கு அதிக ஒதுக்கீடு! விரைவில் நல்ல சேதி!

Subscribe to Oneindia Tamil

உதய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை 50 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றிய இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது தேர்தல்களில் சரிவை சந்தித்து வருகிறது. கட்சியை புனரமைக்கவும், தேர்தல் அரசியலில் சாதிக்கவும் காங்கிரஸ் கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சி பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) இன்று 3வது நாளாக நடைபெற்றது.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

நேற்று 2வது நாள் மாநாடு நடந்து. அப்போது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதி, அரசியல் குழு, பொருளாதார குழு உள்பட பல்வேறு குழுக்கள் ஆலோசனைகள் மேற்கொண்டன. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த குழுக்களின் பரிந்துரைகள் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இடஒதுக்கீட்டில் மாற்றம்

இடஒதுக்கீட்டில் மாற்றம்

அதன்படி நேற்று சமூக நீதி குழு ஆலோசனையின்போது கட்சியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் சிலர் கூறினார்.

50 சதவீத இட ஒதுக்கீடு

50 சதவீத இட ஒதுக்கீடு

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, ஓபிசி, சிறுபான்மை பிரிவுகளின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் சமூக நீதிக் குழு ஒருங்கிணைப்பாளரர் கே.ராஜூ கூறுகையில், "எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என்று குழு விவாதித்தது. பூத் கமிட்டிகள், பிளாக் கமிட்டிகள், மாவட்ட கமிட்டிகள், பிசிசிக்கள் மற்றும் சிடபிள்யூசி என அனைத்து குழுக்களிலும் ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். சமூக நீதி ஆலோசனைக் குழுவை அமைப்பது, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் துணை ஜாதிகள் மற்றும் குழுக்களில் கவனம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

அரசியல் குழு

அரசியல் குழு

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான அரசியல் குழு விவாதம் நடந்தது. இதில், இந்துத்துவா கொள்கை பற்றி விவாதம் செய்யப்பட்டது. மேலும் அரசியல் குழுவில் உள்ள பல தலைவர்களும் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச மாநில அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இளைஞருக்கு எதிர்ப்பு

இளைஞருக்கு எதிர்ப்பு

மேலும் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறப்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது. இதற்கு கேரளா எம்பி ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். கேரளா சட்டசபையில் 52 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வெறும் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் தான் கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்காமல் போனது. இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விவகாரத்தில் அதிக கவனம் வேண்டும் என்றார்.

ஆறு மாதம் ஒருமுறை கூட்டம்

ஆறு மாதம் ஒருமுறை கூட்டம்

இதுதவிர ஆறு மாதங்களுக்கு ஒருமுறை காங்கிரஸ் காரிய கமிட்டி, மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சிறப்புக் கூட்டங்களை நடத்துவது ஆகியவை மற்ற முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதுதவிர கிடப்பில் உள்ள 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா, சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன்மீது காங்கிரஸ் காரிய கமிட்டி தான் இறுதி முடிவு எடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+