பாஜக vs NOTA.. நோட்டாவுக்கு தீவிரமாக ஓட்டு கேட்கும் காங்கிரஸ்! மத்திய பிரதேசத்தில் வினோதம்! பின்னணி?
இந்தூர்: காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை லோக்சபா தேர்தலுக்கான 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் மூன்று கட்ட தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் உள்ள 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. உஜ்ஜைன், இந்தூர் ஆகிய தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையுடன் அங்கு பிரச்சாரம் ஓய்கிறது.
இந்தூர் தொகுதியில் சிட்டிங் பாஜக எம்.பி. சங்கர் லால்வானி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் களத்தில் வேட்பாளரே இல்லாத நிலை உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக அக்சய் காந்தி பாம் களமிறக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்சய் காந்தி பாம். மேலும், அவர் உடனடியாக பாஜகவில் இணைந்தார். இதனால், அங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தூர் லோக்சபா தொகுதியில் 9 சுயேச்சைகள் உட்பட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், பலம் வாய்ந்த வேட்பாளர் யாரும் இல்லாததால் அங்கு பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு அங்கு வேட்பாளரே இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சியும் தற்போது அங்கு பிரச்சாரம் செய்து வருகிறது.
தங்கள் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதற்காக மே 13 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டனை அழுத்துமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்தூர் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் கூறுகையில், "ஜனநாயக விரோத வழியில் தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. இப்போது, ஜனநாயகத்தின் சக்தியை மக்களுக்கு காட்ட விரும்புகிறோம். பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய விதிப்படி, ஒரு தொகுதியில் வேட்பாளர்கள் எல்லோரையும் விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி இருந்தாலும், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்










Click it and Unblock the Notifications