ம.பி.யில் ட்விஸ்ட்.. மாஜி காங். முதல்வர் கமல்நாத் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தப்பி ஓடுகிறாரா?
போபால்: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்கின்றன ஊடக செய்திகள்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்து வருபவர் கமல்நாத். ஆனால் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் அழிந்து போகவும் அக்கட்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பவரும் கமல்நாத் என்பது சீனியர்களின் குமுறல். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைய காரணமே பாஜகவின் பி டீம் ஆக கமல்நாத் செயல்பட்டதுதான் என்பதும் அவர்களது குற்றச்சாட்டு.

கமல்நாத் மீது பகிரங்க விமர்சனம்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 163 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 66 இடங்களில்தான் ஜெயித்தது. ம.பி. தோல்வி தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அலோக் சர்மா, கமல்நாத் மட்டுமே அத்தனை காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு காரணம்; பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்தவர் கமல்நாத். இதனை டெல்லி மேலிடத் தலைவர்கள் தடுக்க தவறிவிட்டனர் என குமுறி இருந்தனர். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கமல்நாத்தை விமர்சித்த காரணத்தால் அலோக் சர்மாவுக்கு காங்கிரஸ் மேலிடமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ராஜ்யசபா தேர்தல்: இந்த பின்னணியில் மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. தமக்கு ராஜ்யசபா சீட் தர வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை கமல்நாத் சந்தித்தார். அதே போல மகனுக்கு சிந்த்வாரா லோக்சபா தொகுதியை தர வேண்டும் என்பதும் கமல்நாத் விருப்பம். ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 3-ல் ஒரு பகுதியினர் தமது ஆதரவாளர்கள் என்பதையும் டெல்லியிடம் சுட்டிக்காட்டி மிரட்டி இருக்கிறாராம் கமல்நாத்.
ராஜ்யசபா சீட்டை முன்வைத்து மிரட்டல்: கமல்நாத் தமக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காமல் போனால் பாஜகவுக்குதான் தாவுவார் என்கின்றன டெல்லி தகவல்கள். கமல்நாத்துக்கு வலதும் இடதுமாக இருக்கிற தலைவர்கள் முதலில் பாஜகவுக்கு தாவுவார்கள்; பின்னர் மகனுடன் கமல்நாத்துடம் பாஜகவுக்கு தாவி விடுவார் என்றே அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் மிதவாத இந்துத்துவா கருத்துகளை முன்வைப்பவர்தான் கமல்நாத். சனாதனம் தொடர்பான தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தமது ஆவேசமான எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் கமல்நாத். இதனாலேயே ம.பி.யில் இந்தியா கூட்டணி கூட்டத்தை நடத்த முடியாது என்று சொன்னவரும் கமல்நாத்.
ராகுல் காந்தி கடும் கோபம்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்க கமல்நாத் காரணம் என்பதாலேயே மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடனான தொடர்பையே முற்றிலும் துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் கமல்நாத் எப்போது பாஜகவுக்கு ஓடுவார் என்பது தேசிய ஊடகங்களின் விவாதப் பொருளாக இருக்கிறது.
கமல்நாத் யார்?: மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கமல்நாத், அம்மாநிலத்தின் சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் 9 முறை போட்டியிட்டு வென்றவர். 1980-ம் ஆண்டு முதல் தீவிர அரசியல் களத்தில் ம.பி. காங்கிரஸ் முகமாக இருப்பவர். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்தார். 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலை தொடர்பான நானாவதி கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கமல்நாத் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications