நரேந்திர மோடிக்கு சந்திரபாபு பாராட்டு! தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க அழைப்பு!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் குஜராத் மாநிலம் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று அம்மாநில முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியையும் சந்திரபாபு பாராட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஆந்திர மாநில முதல்வராக இருந்த போது ஹைதராபாத் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயித்து செயல்பட்டோம்.

அன்று ஹைதராபாத்.. இன்று குஜராத்
அப்போது கிளிண்டன், டோனி பிளேர் என வெளிநாட்டுத் தலைவர்கள் பலரும் ஹைதராபாத் வந்தனர். அன்று ஹைதராபாத் எப்படி இருந்ததோ இப்போது அப்படி இருக்கிறது குஜராத் மாநிலம்.

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்காலம்
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு வேலைவாய்ப்புமே உருவாக்கப்படவில்லை.

மத்திய அரசு மீது சாடல்
விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது. டெல்லி மருத்துவ மாணவி விவகாரம் ஒன்றே அதற்கு சாட்சி. உத்தர்காண்ட் வெள்ளத்தின் போது நானும் குஜராத் முதல்வர் மோடியும் அங்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அம்மாநில அரசு சரியாக செயல்படவில்லை.

ராகுலின் நாடகம்
தண்டனை பெற்ற எம்.பி.,எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருப்பதும் இன்று பிரதமரை போய் சந்திப்பதும் திட்டமிட்ட நாடகமே.

இந்தியா வல்லரசாகும்..
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. இதுதான் நமக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம். இந்தியா வல்லரசு ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லரசாக்குவோம்.

காங்கிரஸை வீழ்த்துவோம்
வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தாவிட்டால் பாதிப்பு நமக்குதான். அதனால் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications