மோடிக்கு எதிராக வாரணாசியில் காங்- சமாஜ்வாடி சார்பில் பொதுவேட்பாளர் போட்டி?
வாரணாசி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை களம் இறக்குவது குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் ஏற்கெனவே கைலாச் செளராசியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

வாரணாசியில் 6 முனைப் போட்டி?
மொத்தம் இத்தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 6 முனைப் போட்டி நிலவுகிறது. இது நரேந்திர மோடிக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ்- சமாஜ்வாடி சார்பில் பொதுவேட்பாளர்?
இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடியும் மோடிக்கு எதிராக பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த பொதுவேட்பாளர் விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவும் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருவர் பெயர் பரிசீலனை
இந்த ஆலோசனையின் முடிவில் இரண்டு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. வாரணாசியின் சிவபெருமானின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர் அதன் மன்னர். ஆனால் அவர் அரசியலை விரும்பவில்லை. ஆனால் அவரது உறவினரான அஹிப்ஹூசன் அரசியலில் ஆர்வம் கொண்டவர். அதேபோல் டைம் பத்திரிகையின் விருதுபெற்ற பனாரஸ் பல்கலைக் கழக பேராசிரியரும் சங்கத் மோசன் கோயில் தலைமை குருவுமாகிய விஸ்வாம்பர்நாத் மிஸ்ரா. இவர்கள் இருவரில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது என காங்கிரஸ்- சமாஜ்வாடி கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன.
ஆசாம் கான் பொதுவேட்பாளரா?
அப்படி பொதுவேட்பாளர் நிறுத்தப்படும் நிலையில் சமாஜ்வாடி கட்சி அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெறப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கானை பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை முலாயம்சிங் யாதவ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications