பலாத்கார புகார்: ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் காங். கட்சியில் இருந்து சஸ்பென்ட்
ஜெய்ப்பூர்: பாலியல் பலாத்கார புகாருக்குள்ளான ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் பாபுலால் நாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருந்தவர் பாபுலால் நாகர். அவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக, 35 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி தாம் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தைத் தெரிவித்தார்.
இதனால் பாபுலால் நாகரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பாபுலால் நாகர் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதுடன் அவரது படுக்கை அறையையும் சீல் வைத்தனர். இதன் எதிரொலியாக அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் பாபுலால் நாகரை காங்கிரஸ் கட்சி மேலிடம் சஸ்பென்ட் செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாபுலால் நாகர், என்னைப் பற்றிய உண்மை விரைவில் காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிய வரும். கட்சியின் கதவுகள் எனக்காகவே திறந்து இருக்கும் என்றார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications