திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: புதைகுழியில் இருந்து மீண்டு எழுமா காங்கிரஸ்?
அகர்தலா/கோஹிமா/ஷில்லாங்; நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மாநிலங்களில் கோலோச்சி கொண்டிருந்த நிலையில் இப்போது புதைகுழிக்கு அனுப்பிவைக்கப்பட்ட காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுமா? என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பாஜக காலூன்றவே முடியாது என சிலிர்த்துக் கொண்டு நின்றது காங்கிரஸ் என்பது ஒரு காலம். ஆனால் இப்போது பாஜக அம்மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்க காங்கிரஸ் எங்கே இருக்கிறது என தேடவேண்டிய துர்பாக்கிய நிலைதான்.

மேகாலயா மாநிலத்தில் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் என்பிபி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்பதே காணாமல் போய்விட்டது. காங்கிரஸ் கட்சியினர் இப்போது திரிணாமுல் காங்கிரஸ், என்பிபி கட்சியினராக உருமாறிவிட்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவிவிட்டனர். இப்போது மேகலாயா மாநில சட்டசபையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எம்எல்ஏ கூட இல்லையே என்கிற பரிதாப நிலைதான்.
ஆனாலும் 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் எப்படியும் உயிர்பெற முடியும் என நம்பிக்கையுடன் உள்ளது காங்கிரஸ். இதற்காக ஒவ்வொரு மாவட்டம், வட்டமாக காங்கிரஸ் நிர்வாகிகள் பயணம் சென்று கட்சியை மறுசீரமைக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர். அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீள் கட்டமைப்பு செய்தாக வேண்டிய நிலைதான் மேகாலயாவில் உள்ளது. இப்போதே காங்கிரஸ் வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இன்னமும் ஒருவித நம்பிக்கையோடுதான் இருக்கிறது மேகாலயாவில்!
நாகாலாந்து மாநிலத்திலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்ட நிலைதான். ஆனாலும் நாகாலாந்து மாநிலத்தின் 60 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஜேடியூ உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. 2018-ம் ஆண்டு நாகாலாந்து தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கூட வெல்லவில்லை. 11 லட்சம் வாக்காளர்களில் சுமார் 30,000 வாக்குகளைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் மாநில கட்சியான என்பிஎப்-ல் ஐக்கியமாகினர். அதன்பின்னர் காங்கிரஸை தேடிக் கொண்டிருக்க வேண்டிய கதிதான். இத்தனைக்கும் நாகாலாந்தில் பாஜகவுக்கு எதிரான அலை இருந்தபோதும் அறுவடை செய்ய காங்கிரஸ் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2023-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் மற்றொரு வடகிழக்கு மாநிலம் திரிபுரா. இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது திரிபுரா. ஒற்றை சீட்டுக்கே போராடிக் கொண்டிருந்தது பாஜக. ஆனால் காலம் காங்கிரஸ் வழியாக பாஜகவுக்கு கதவை திறந்துவிட்டது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பாஜகவாக மாறியது. திரிபுராவில் காங்கிரஸ் கட்சியினர் அத்தனை பேரும் பாஜகவினராக மாறினர். இதனால் திரிபுராவில் இடதுசாரிகள் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. திரிபுராவில் இப்போதும் பாஜக எனும் மாஜி காங்கிரஸ், இடதுசாரிகள் இடையேதான் போட்டி. காங்கிரஸ் எனும் பேரியக்கம் இந்த மாநிலத்திலும் ரேஸிலேயே இல்லை என்பது எத்தனை பெரிய துயரம். இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களில் புதைகுழியில் இருந்து புறப்பட்டு எழுவோம் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது காங்கிரஸ்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications