4000 ரூபாய்க்காக பேங்க் வாசலில் மக்களோடு கியூவில் நின்ற ராகுல் காந்தி! #Rahulgandhi

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்.பி.ஐ வங்கியில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, ரூபாய் நோட்டு மாற்ற கியூவில் நின்று பரபரப்பு ஏற்படுத்தினார்.

Congress Vice president Rahul Gandhi at SBI, Parliament street

டெல்லி, பார்லிமென்ட் சாலையில், உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு இன்று மாலை திடீரென வருகை தந்தார் ராகுல் காந்தி, அங்கு ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்ற மக்கள் கூட்டத்தோடு அவரும் கியூவில் நின்றார். இதை எதிர்பார்க்காத மக்கள், நீங்கள் உள்ளே போங்கள் என கூறினர். மறுத்த ராகுல் காந்தி, மக்கள் கூட்டத்தோடு நின்றார்.

இதையறிந்த மீடியாக்கள் அங்கு விரைந்தன. அதற்குள், மக்களும் கூட செல்ஃபிகளை எடுத்தனர். ரூ.4000 மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும். அதை பெறவே தான் வந்ததாக ராகுல் காந்தி கூறினார்.

பணத்தை மாற்ற மக்கள் நீண்ட கியூக்களில் நிற்பதால், கடுமையான சிரமத்தை மக்கள் சந்திக்கிறார்கள். அந்த கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவே நானும் வந்தேன்., மக்களின் சிரமத்தை இப்போது என்னாலும் உணர முடிகிறது. மோடி அரசும் இந்த கஷ்டத்தை உணர வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+