கெஜ்ரிவால் உருவ பொம்மையை எரித்து பஞ்சாப் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
லூதியானா: பஞ்சாப் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பல்பிர் ராணி சோதி தலைமையில், ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரசார் திரண்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றது. அதற்கான, பிரச்சார பயணமாக அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் சென்றுள்ளார். அங்கு, நான்கு நாட்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தங்கியுள்ள ஓய்வு இல்லம் அருகே பஞ்சாப் மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் பல்பிர் ராணி சோதி தலைமையில், ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரசார் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கெஜ்ரிவாலின் உருவ பொம்மையை எரித்தும் முழக்கமிட்டனர்.
இதனால், கெஜ்ரிவால் தங்கியிருந்த பகுதி அருகில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், காவல்துறையினர் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். முன்னதாக, ஆம்ஆத்மி எம்பி, எம்எல்ஏக்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து பஞ்சாப் கிளம்பும் போது அங்கு பெண்கள் வளையல்களை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications