ஸ்மார்ட்போன் “வைரஸ்” தாக்குதலில் இந்தியாவிற்கு 2ஆம் இடம் - கேஸ்பர்ஸ்கி தகவல்!
மும்பை: உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் வைரஸ் தாக்குதல் ஏற்படுவதில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாக கேஸ்பர்ஸ்கி ஆன்டிவைரஸ் ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகளவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது.
அதற்கேற்றவாறு சைபர் கிரிமினல்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக பிரபல ஆன்டி வைரஸ் மென்பொருளான கேஸ்பர்ஸ்கி தெரிவித்துள்ளது.

முதலிடத்தில் இந்தியா:
இதுதொடர்பாக கேஸ்பர்ஸ்கி ஆய்வகம் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 2 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் அதிகம்:
குறிப்பாக மால்வேர் எனப்படும் வைரஸ்களின் தாக்குதல் இந்திய ஸ்மார்ட்போன்களில் அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் இணையப் பயன்பாடு:
பொருட்களை வாங்குவது, வங்கி பரிமாற்றங்கள், டாக்ஸி போன்ற வாகனங்களை புக்கிங் செய்வது என அனைத்திற்கும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வருகின்றது.

பணப்பரிமாற்றம் ஜாக்கிரதை:
இந்த சூழ்நிலையில் மால்வேர் தாக்குதல்கள் ஸ்மார்ட்போனில் இருந்து பல்வேறு சொந்த தகவல்களையும், பணப் பரிமாற்ற தகவல்களையும் சைபர் கிரிமினல்கள் திருடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கேஸ்பர்ஸ்கி எச்சரித்துள்ளது.

கவனம் அவசியம்:
இந்த தகவலை கேஸ்பர்ஸ்கி ஆய்வகத்தின் தெற்கு ஆசிய இயக்குனர் இத்தாப் கால்தே தெரிவித்துள்ளார். அதனால் இணையவழி பயன்பாடுகளில், முக்கியமாக ஸ்மார்ட்போன் உபயோகத்தில் கவனம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications