For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் பாக். தூதர் ஆலோசனை!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்களுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் இடையே ஆகஸ்ட் 25-ந் தேதியன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கக்கு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் மிர்வாஸ் உமர் பரூக், சையத் அலி கிலானி, சபீர் அகமதுஷா, ஜேகேஎல்ப் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாகிஸ்தானின் இந்த யுத்தியை பழைய அணுகுமுறை என்று பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் இது குறித்து கூறுகையில், இத்தகைய பழைய அணுகுமுறைகளால் ஒரு பயனும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

English summary
Sparking off a controversy, meeting of Pakistan High Commissioner Abdul Basit with Kashmiri separatist leaders in Delhi ahead of Indo-Pak Foreign Secretary talks has been termed "most unfortunate" and "old tactics" by the Bharatiya Janata Party (BJP) government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X