Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரண்ட் பில் அதிகம்தான்..மரத்தடியில் உட்காருங்க- நக்கலடித்த அஸ்ஸாம் சபாநாயகர் வீட்டில் 22 ஏசிகள்!

Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: மின் கட்டண உயர்வால் மின்சாரத்தை பயன்படுத்தாமல் மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாருங்க என கிண்டலடித்த அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக அரசின் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி வீட்டில் 22 ஏசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஸ்ஸாம் மாநில ஆளும் பாஜக் அரசு தொடர்ந்து மின் கட்டணங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரி பதில் அளிக்கையில், ஆமாம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை உங்களால் செலுத்த முடியவில்லை எனில் ஃபேன் சுவிட்சை எல்லாம் போடாதீர்கள். வீட்டுக்கு வெளியே போய் மரத்தடியில் அமர்ந்து கொள்ளலாம். மாநில அரசானது மின்சாரத்தை தனியாரிடம்தான் வாங்கி வருகிறது. அந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையை அதிகரித்து விடுகின்றன,. அதனால்தான் மாநில அரசும் மின்சார கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றார்.

 Controversy over Assam Speaker Biswajit Daimary install 22 ACs in house

அஸ்ஸாம் சபாநாயகர் பிஸ்வாஜித் தைமாரியின் இந்த பதில் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கமலாக்யா தேய் புர்கயசதா, பிஸ்வாஜித் தைமாரியின் வீடு முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலாக்யா தேய் புர்கயசதா, சபாநாயகரின் அதிகாரப்பூர்வ வீட்டில் மொத்தம் 22 ஏசிகள் பொருத்தப்பட்டுள்ளன. வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. வீட்டு பாதுகாவலர்களின் ஓய்வு அறையிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு எப்படி மக்களின் துயரம் தெரியும்? என்றார். மேலும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அஸ்ஸாம் மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் சபாநாயகர் பிஸ்வாஜித் என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி சுஷ்மிதா தேவ் கூறுகையில், ஒரு அரசாங்கம் என்பது மக்களுக்கானது. ஆனால் பாஜக தலைவர்களோ மக்களை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதில் ஒன்றுதான் சபாநாயகர் பிஸ்வாஜித்தின் மரத்தடியில் ஓய்வெடுங்கள் என்கிற கருத்து என்றார்.

இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர் பிஸ்வாஜித், நான் சொன்னதில் எந்த தவறுமே இல்லை. என்னுடைய கருத்துகளை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர் என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+