காஷ்மீரில் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரி மாயம்: தேடும் பணி தீவிரம்
காஷ்மீர்: தெற்கு காஷ்மீரில் 4 ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரி மாயமானதைத் தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துணை சூப்பிரண்டு போலீஸ் அதிகாரிக்கு பர்சனல் செக்யூரிட்டி ஆபிஸராக பணிபுரிந்து வந்த சாகூர் அகமது துப்பாக்கி குண்டுகள் அடங்கிய 13 மேகசைன் மற்றும் 4 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் மாயமாகிவிட்டார். இவர் தெற்கு காஷ்மீரில் தீவிரவாத கும்பலுடன் இணைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தெற்கு காஷ்மீரில் பிஜ்பெகரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த சாகூர் அகமது கடந்த இரண்டு நாட்களாக தனது பணி குறித்த எந்த ரிப்போர்ட்டையும் மேலதிகாரிக்கு தெரிவிக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் விசாரித்த போது அவர்களும் தனது மகன் மற்றும் அவரது இரண்டு நண்பர்களும் கடந்த சில நாட்களாக காணவில்லை என தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக ஆயுதங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க துவங்கினர். அப்போது, 4 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு மேகசைனுக்கு 30 குண்டுகள் வீதம் அடங்கிய 13 மேகசைன்களும் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் மாயமான போலீஸ் அதிகாரி சாகூர் அகமதை தேடும் பணியைத் தீவிரபடுத்தியுள்ளது காஷ்மீர் போலீஸ்.
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications