ஹோட்டலில் விபச்சாரம்.. 2 பேர் கைது.. 2 பெண்கள் மீட்பு
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள் ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த ஹோட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அமர் பிரேம்தாஸ் தேஷ்பிராதர் மற்றும் ரமேஷ் பகேலால் குப்தா ஆகிய இரண்டு புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3000 பணம் மற்றும் இதர பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் போலீசார் மீட்டனர். அவர்கள் இருவரும் அரசு காப்பகத்தில் ஒப்படைப்பட்டுள்ளனர்.
பாலியல் புரோக்கரான அமர் பிரேம்தாஸ் தேஷ்பிராதர் பெண்களை காரில் அழைத்து வந்து ஹோட்டலில் விடுவதும், அவர்களுக்கு ஹோட்டல் மேனேஜர் ரமேஷ் பகேலால் குப்தா அறைகள் ஒதுக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட புரோக்கர்களின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலியல் தொழில் புரோக்கர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications