சல்மான் கான் தங்கை அளித்த பார்ட்டியில் போலீசார் ரெய்டு: ரூ.12,500 அபராதம்
மும்பை: மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது போலீசார் அதிரடி சோதனை நடத்தி மியூசிக் சிஸ்டத்தை பறிமுதல் செய்து ரூ. 12 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். பார்ட்டியில் அந்த தெருவுக்கே கேட்கும் அளவுக்கு பாட்டு போட்டு டான்ஸ் ஆடினர். இரவு நேரத்தில் அர்பிதா வீட்டில் இருந்து வந்த சப்தத்தால் அக்கம்பக்கத்தினரால் தூங்க முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் அதிகாலை 2.30 மணிக்கு கார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அர்பிதாவின் வீட்டிற்கு வந்து பாட்டை நிறுத்துமாறு கூறினர்.
மியூசிக் சிஸ்டத்தை பறிமுதல் செய்த போலீசார் பார்ட்டி ஏற்பாட்டாளரான சந்தோஷ் மனேவுக்கு ரூ.12, ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். சந்தோஷ் கார் காவல் நிலையத்திற்கு சென்று அபராதம் செலுத்தினார். அதன் பிறகு மியூசிக் சிஸ்டம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மும்பையில் பிரபலம் ஒருவரின் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது போலீசார் சோதனை நடத்தியது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications