தவறான டிராக்.. 127 கி.மீ வேகம்..கோரமண்டல் விபத்தில் சிக்கியதற்கு காரணம் இதுவா? வெளியான திடுக் தகவல்
புவனேஷ்வர்: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கும் போது அதன் முழு வேகமான மணிக்கு 127 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாகவும் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் நேற்று 1,257 முன்பதிவு செய்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது.

சரக்கு ரயில் மீது மோதியதில் ரயிலின் 21 பெட்டிகள் வரை தடம் புரண்டு கவிழ்ந்தது. சற்று நேரத்தில், அந்த வழியாக வந்த யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டன. நேற்று இரவு 6.50 மணியளவில் இருந்து 7.10 க்குள் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. ரயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்து சிதைந்து கிடந்தன.
இந்த இடிபாடுகளுக்குள் இருந்து படுகாயத்துடனும் பயணிகள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். சடலங்களும் சிதைந்த நிலையில் கிடந்தன. இந்த விபத்தில் சுமார் 261 பயணிகள் பலியானதாகவும் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் சோகத்தை இந்த ரயில் விபத்து ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரும் ரயில் விபத்துக்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரயில் பயணம் தான் மிகவும் பாதுகாப்பான பயணம் என்று பொதுவாக சொல்வதுண்டு. ஆனால் நவீன வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலத்தில் கூட தடம் புரண்ட ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக பயணிகள் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரயில் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறுகளே காரணமாக இருக்கலாம் என்று கூட சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு தரவுகளின் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது ரயில் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தவறான தண்டவாளத்தில் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
அதாவது மணிக்கு 127 கி.மீட்டர் வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்திற்குள் தவறுதலாக சென்று விபத்தில் சிக்கியுள்ளது. மின்னல் வேகத்தில் வந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதியதில், தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அதற்கு ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது தடம் புரண்டு கிடந்த கோரமண்டல் ரயில் மீது மோதியுள்ளது. இதில் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு.. ஒன்றன் மேல் ஒன்றாக நொறுங்கியுள்ளது.
ரயில் தவறான டிராக்கில் சென்றது எப்படி, எதனால் சென்றது எப்படி என்ற உண்மையான காரணம் ரயில்வே உரிய விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்ட பிறகே தெரிய வரும். எனினும் மனித தவறுகளே இந்த தவறுக்கு காரணமாக இருக்கலாம் என்று முகாந்திரம் இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத சில ரயில்வே அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications