லாக்டவுன் நடைபயண துயரம்... போலீஸுக்கு பயந்து பயங்கர பள்ளத்தாக்கில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் மீட்பு
நாசிக்: லாக்டவுன் காலத்தில் சிக்கிக் கொண்ட பிற மாநில தொழிலாளர்களின் துயரங்கள் சொல்லி தீராதவை. மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி கால்நடையாக பயணித்த 4 தொழிலாளர்கள் பேராபத்தில் இருந்து மீண்டதை சொல்கிறது இச்செய்தி.
லாக்டவுன்... இந்திய சமூகம் இதுவரை அனுபவிக்காத பெருந்துயரம். 5 வாரங்களாக லாக்டவுன் நீடிக்கிறது. சொந்த மண்ணில் லாக்டவுனை மீறும் சேட்டைக்கார கோஷ்டிகள் ஒருபக்கம்.

இன்னொருபக்கம் சொந்த மண்ணை விட்டு மொழி புரியாத மண்ணில் பிறரது உதவியை மட்டுமே நம்பி உயிரை கையில் பிடித்து கொண்டு வாழும் அன்றாடங்காய்ச்சிகள்... இந்த கொடுமையை தாங்க முடியாது என்று உணர்ந்து எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவானாலும் நடந்தே சொந்த மண்ணுக்கு பயணித்தவர்கள் பல்லாயிரம்.
அப்படித்தான் மகாராஷ்டிராவில் தானே பகுதியில் குடோன் ஒன்றில் பணிபுரிந்த உத்தரப்பிரதேச தொழிலாளர்கள், உரிமையாளரால் கைவிடப்பட்டனர். இதனால் வேறுவழியே இல்லாமல் மகாராஷ்டிராவில் இருந்து 1,500 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப்பிரதேசத்துக்கு நடைபயணத்தை தொடர்ந்தனர்.
வழியில் போலீஸ் சோதனை சாவடியை கண்டதும் அச்சப்பட்ட கூலி தொழிலாளர்கள் நள்ளிரவு நேரத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் பதுங்கினர். அப்போதுதான் அவர்கள் உணர்ந்தனர் தாங்கள் சிக்கியிருப்பது பயங்கர பள்ளத்தாக்கு ஒன்றில் என்பது. வேறுவழியே இல்லாமல் அவசர உதவி எண் 100-ல் தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை சொல்லி கதறி இருக்கின்றனர்.
வனாந்திரத்தில் எங்கே இவர்களை தேடுவது? பல்வேறு தொடர் முயற்சிகளுக்கு பின்னர் மரணத்தின் பிடிக்குப் போன 4 அப்பாவி உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மீட்கப்பட்டு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் அந்த 4 தொழிலாளர்களும்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications