மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா! கர்ப்பிணிகள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்! 4வது பாயிண்ட் ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக மருத்துவர்கள் சில முக்கிய பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சில ஆசிய நகரங்களில் கொரோனா பரவல் முதலில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இப்போது பரவலாக பல்வேறு இடங்களிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Coronavirus and Pregnant Women What are the 7 Health Tips for Moms-to-Be
Photo Credit:

கர்ப்பிணிப் பெண்கள்

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலும் கொரோனா பரவல் ஏற்படும்போது கருவுறும் பெண்கள் இன்னுமே அதீத எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இப்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கைகளை கழுவ வேண்டும்

முதலில் அடிக்கடி கை கழுவுங்கள்.. கைகளைக் கழுவி, அதுவும் சோப் போட்டு கை கழுவினாலே கொரோனா மட்டுமில்லை எந்தவொரு வைரஸும் உங்களைத் தாக்காது. அனைத்து விதமான வைரஸ்களில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த முறை கை கழுவுவது. எனவே, பொது இடங்களில் கை வைத்தால் உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளைத் தவறாமல் கழுவுங்கள்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், "கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லும்போது தங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.. குறிப்பாகக் கதவு கைப்பிடிகள், லிப்ட் பட்டன்கள், பொது போக்குவரத்தைப் பயன்படுத்திய பிறகு வெளியில் இருக்கும்போது முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும். அல்லது கையோடு சானிடைசர் எடுத்துச் செல்லுங்கள். அதைப் பயன்படுத்துவதன் மூலம் கிருமிகளை அழிக்க முடியும்.

மாஸ்க் கட்டாயம்

மூன்று அடுக்கு மாஸ்க்கை அணியவும். பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயம். மாஸ்க் எந்தளவுக்கு முக்கியமோ அதை விட அதை நாம் எப்படி அணிகிறோம் என்பது முக்கியம். வாய் மற்றும் மூக்கு முழுமையாக மூடியிருப்பது போல மாஸ்க்குகளை அணியவும். அதுதான் நமக்கு 360 டிகிரி பாதுகாப்பை வழங்கும். அதேபோல குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தொலைவில் சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள். அப்போது தான் அவர்களின் உடலில் இருந்து வெளியாகும் நீர்த்துளிகளால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

கூடுதல் கவனம்

நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.. ஷாப்பிங் மால்கள், பொது நிகழ்ச்சிகள், மருத்துவமனை வெயிட்டிங் ஹாலில் கூட இருப்பதை முடிந்தவரைத் தவிர்க்கவும். பொதுவாக வைரஸ் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் அறிகுறி இருக்காது. அவருக்கு அறிகுறி இல்லாத தொற்று கூட ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் அவர் அருகே செல்லும்போது அது உங்களைத் தாக்கி மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, பொது இடங்களுக்குச் செல்லும்போதே கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இதுதான் முக்கியம்

சத்தான உணவைச் சாப்பிடுங்கள்.. உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.. உடலில் வலிமையான நோயெதிர்ப்பு அமைப்பு வேண்டும் என்றால் அதற்குச் சரியான ஊட்டச்சத்துகள் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள். அதேபோல உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க நிறையத் தண்ணீர் குடிக்கவும். நல்ல ஊட்டச்சத்து தான் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க உதவுகிறது. எனவே, அதை எப்போதும் மறந்துவிட வேண்டாம்.

மகப்பேறுக்கு காலத்தில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்ற சப்ளிமெண்ட்களை மருத்துவர்கள் வழங்குவார்கள். அவை நோயெதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மருத்துவர்கள் வழங்கிய வைட்டமின்களை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம். அவை கரு வளர்ச்சிக்கு மட்டுமல்ல, தாயை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மருத்துவர்கள்

உங்கள் மகப்பேறு மருத்துவருடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.. உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் லேசான அறிகுறிகள் இருக்கும்போதே அதை தெளிவுபடுத்திவிட்டால் மோசமான சிக்கல்களை தவிர்க்கலாம். மருத்துவமனைகளில் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் செல்லுங்கள். அல்லது சிறிய பிரச்சினைகளுக்கு டெலிபோன் மூலமே சந்தேகங்களை தீர்க்கலாம்.

தேவையான தடுப்பூசிகளை கருத்தரிக்கும் முன்பு அல்லது ஆரம்ப காலத்தில் மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தாராளமாக கொரோனா தடுப்பூசிகளை மருத்துவர்கள் ஆலோசனையுடன் போட்டுக் கொள்ளலாம். அவை எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது. மேலும், கொரோனா பாதிப்பு ஏற்படுவதையும் குறைக்கும். இது கருவில் வளரும் சிசுவுக்கும் நன்மையையே தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+