நானே உயிர் பயத்துல இருக்கேன்.. இதுல இது வேறயா.. "பய பீதியில்" வீடியோ போட்ட நபர்
கொரோனா நோயாளி ஃபேனால் தன் உயிருக்கு ஆபத்து என வீடியோ போட்டுள்ளார்
போபால்: "நானே நாளெல்லாம் உயிர் பயத்துல இருக்கேன்.. இது வேறயா.. இது எப்போ கீழே கழண்டு விழும்ன்னே தெரியலயே" என்று இளைஞர் ஒருவர் அலறி போய் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியும் வருகிறது. இதில் வடமாநிலங்களில் நிலைமை படுமோசமாக இருக்கிறது.
ஆஸ்பத்திரிகள் கிடைக்காமல், ஆம்புலன்ஸ்கள் கிடைக்காமல், தடுப்பூசிகள் கிடைக்காமல், ஆக்சிஜனும் கிடைக்காமல், கடைசியில் சுடுகாடும் கிடைக்காமல், தினம் தினம் மக்கள் கதிகலங்கி வருகிறார்கள்.

உயிரிழப்புகள்
ஒருவேளை ஆஸ்பத்திரிகளிலேயே இடம் கிடைத்தாலும், உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. மருத்துவமனைகளின் அஜாக்கிரதை காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து, உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.. ஓட்டை உடைசலுடன் காணப்படும் ஆம்புலன்ஸ்களில் இருந்து சடலங்கள் பொத் பொத்தென்று ரோட்டில் விழுகின்றன.

மத்திய பிரதேசம்
இதுபோன்ற சூழலில், இன்னொரு சம்பவமும் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. சிந்த்வாரா என்ற இளைஞர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு, கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது தலை மீது சுற்றிக் கொண்டிருக்கும் ஃபேன் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலைமையில் உள்ளது.

வீடியோ
எனவே, நாளெல்லாம் அந்த ஃபேனையே பயந்து பயந்து பார்த்தபடி, இளைஞர் மிரண்டுபோய் கிடக்கிறார்.. இது சம்பந்தமாக கோரிக்கை வைத்து, ஒரு வீடியோவையும் சம்பந்தப்பட்ட நபர் வெளியிட்டுள்ளார். அதில், "பொழுதெல்லாம் பயத்திலேயே இருக்கிறேன்.. ஒன்னு இந்த ஃபேனை மாத்துங்க.. இல்லாட்டி, என்னை வேற இடத்துக்கு மாத்துங்க.. இதை நான் பலமுறை இங்கே இருக்கிற ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் சொல்லியும் யாருமே கண்டுகொள்ளவில்லை.." என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சை
நொந்து போய் நோயாளி போட்ட இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த மையம் ஒரு பெரிய ஹால் போல காணப்படுகிறது.. அதில் நிறைய படுக்கைகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதில் ஒரு படுக்கையில் இந்த இளைஞரும் படுத்துள்ளார்..
|
வடமாநிலம்
உண்மையிலேயே அந்த ஃபேனை பார்த்தால் பயமாகத்தான் இருக்கிறது.. கிரைண்டரில் ஆட்டுக்கல் ஆடுமே.. அந்த மாதிரி ஃபேன் அந்தரத்தில் சுழன்று சுழன்று ஆடுகிறது.. அவ்வளவு பெரிய ஓட்டை, அந்த ஃபேன் மாட்டும் தளத்தில் தெரிகிறது.. இதனால் ஃபேன் சத்தமும் அதிகமாக கேட்கும் என்றும், இதுவும் கூடுதல் பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிகிறது. ஒரு சாதாரண சீலிங் ஃபேனை பார்த்து, உயிருக்கு நடுங்கும் கதியில் வடமாநில ஆஸ்பத்திரிகளின் நிலைமை உள்ளதை என்னவென்று சொல்வது?!












Click it and Unblock the Notifications