மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. டெல்டா வகையால் மாரடைப்பு ஏற்படும்! ஐஐடி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: இந்தியாவில் இப்போது சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா மரணங்களும் ஏற்படத் தொடங்கியுள்ளன. இதற்கிடையே டெல்டா வகை கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் அது சைலண்ட் மாரடைப்பை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.

கடந்த 2019ல் பரவ தொடங்கிய கொரோனா சில ஆண்டுகள் வரை நம்மைப் படுத்தி எடுத்தது. குறிப்பாக இந்தியாவில் 2வது அலையின் போதுதான் பாதிப்பு உச்சமாக இருந்தது. ஏகப்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டன. நீண்ட முயற்சிக்குப் பிறகு இப்போது தான் கொரோனா பரவலை நாம் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

Coronavirus Delta Variant Linked to Silent Heart Attacks Reveals new IIT Indore Study

அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்

இதற்கிடையே இந்தியா உட்பட ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 1000+ கடந்துள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், கொரோனா காரணமாக ஓரிரு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்தூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் கொரோனா குறித்த நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

டெல்டா கொரோனா

இந்த ஆய்வில் அவர்கள் டெல்டா கொரோனா குறித்தே ஆய்வு நடத்தினர். இந்த டெல்டா வகை கொரோனா காரணமாகவே நாட்டில் 2வது அலை பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இது குறித்து இந்தூர் ஐஐடி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் டெல்டா கொரோனாவால் சைலண்ட் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி டெல்டா கொரோனாவால் தைராய்ட் பாதிப்பும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்தும் இதர உடல்நல சிக்கல்கள் குறித்தும் இதில் பல முக்கியமான பாயிண்டுகள் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை கொரோனாவும் மனித உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும்.

ஐசிஎம்ஆர் விரிவான ஆய்வு

புரோட்டியோம் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் கொரோனா குறித்த புரிதலை அதிகரிக்கிறது. மேலும், அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை சரியாக இருக்கும் என்பது குறித்தும் தெளிவான பிம்பத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக 3,134 நோயாளிகளின் டேட்டாக்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட 3,134 நோயாளிகளின் டேட்டாவை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முதலில் பரவிய கொரோனா, பிறகு ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா என உருமாற்றம் அடைந்த கொரோனா வகைகளின் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கொரோனாவின் C-ரியாக்டிவ் புரதம், ஃபெரிடின், D-டைமர், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாட்டு என அனைத்து குறித்தும் விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.

சைலண்ட் மாரடைப்பு

அதில் இந்தியாவில் அதீத பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனாவே உடலின் பயோகெமிக்கல் பேலன்ஸை அதிகம் பாதிப்பது தெரிய வந்துள்ளது. சைலண்ட் மாரடைப்பு மட்டுமின்றி தைராய்டு பிரச்சினையை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. வைரஸின் ஸ்பைக் புரதத்திற்கு (நமது உடலில் செல்களுடன் ஒரு வைரஸ் வலுவான பிணைப்பை ஏற்படுத்த இந்த புரத ஸ்பைக் தான் உதவுகிறது) நுரையீரல் மற்றும் பெருங்குடல் செல்களையும் பாதிப்பது தெரிய வந்துள்ளது.

டெல்டா மாறுபாடு உடலின் உயிர்வேதியியல் சமநிலையில் மிகவும் குறிப்பிடத்தக்க இடையூற்றை ஏற்படுத்தியது, இது கேட்டகோலமைன் மற்றும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதித்து, அமைதியான இதய செயலிழப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+