ரூ1,000க்கு விற்கப்பட்ட மத்திய அரசு ஆவணங்கள்.. அதிர வைக்கும் தகவல்கள்
மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வாரி வழங்குகிறார். அதே நேரத்தில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசின் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கு விசாரணையும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றது.
அன்மையில் மத்திய வனத்துறை அமைச்சக பணியாளர் மற்றும் யு.பி.எஸ்.சி. பணியாளர் என இருவர் கைது செய்யப்பட்டனர். வனத்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த ஒரு ஆவணமும் திருடப்படவில்லை..ஆனால் பிற அமைச்சகங்களில் உள்ள பணியாளர்களுடனான நட்பின் அடிப்படையில் ஆவணங்களைத் திருடுவதற்கு அவர் உதவியிருக்கிறார் என்கின்றனர் டெல்லி போலீசார்.

வனத்துறை அமைச்சக பணியாளரான ஜிதேந்தர் நாக்பால் இப்படி ஆவணங்களை கசியவிட்டதன் மூலம் தொடர்ச்சியாக ரூ1 லட்சம் ஆதாயம் அடைந்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் இணை செயலருக்கு தனிச்செயலராக இருப்பவர்.
யு.பி.எஸ்.சி. உறுப்பினர் ஒருவரின் உதவியாளராக இருக்கும் விபன்குமாரும் இப்போது சிக்கியிருப்பவர்.. பொதுவாக நாக்பாலும் விபன்குமாரும் இதர அமைச்சகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உதவியுடன் ஆவணங்களைத் திருடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்று ஆதாயம் அடைந்திருக்கின்றனர். இந்த மோசடி கடந்த 12 ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்திருக்கிறது.
இந்த 12 ஆண்டுகாலத்திலும் தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து ஒரு ஆவணத்தைக் கூட இவர்கள் கசியவிட்டதும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பொதுவாக ஒரு இ மெயிலை உருவாக்கி அதில் draft பகுதியில் அமைச்சக ஆவணங்களை சேவ் செய்து வைத்துவிடும் யுக்தியையே கடைபிடித்து வைத்துள்ளனர். அதேபோல் செல்போன்களில் பேசினால் அது தனிப்பட்ட உறவு முறையிலான உரையாடலாக மட்டுமே இருக்குமாறும் கவனமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.
விபன்குமாரும் நாக்பாலும் தனியார் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த லோகேஷ் சர்மா என்பவருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். லோகேஷ் சர்மா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவர் தமக்கு கிடைத்த ஆவணங்களை வேறு சில ஆலோசனை நிறுவனங்களுக்கு விற்று பணம் சம்பாதித்திருக்கிறார்.
இப்படி ஆவணங்களைப் பரிமாறுவதற்கு இடைத்தரகர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த இடைத்தரகர்களுக்கான தொகை என்பது கொடுக்கும் ஆவணத்தின் மதிப்பைப் பொறுத்ததுதானாம். சில நேரங்களில் ரூ1,000, ரூ 2,000 என சொற்பத் தொகையும் கூட இடைத்தரகர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இடைத்தரகர்களுக்கு மிக அதிகபட்சமாக ரூ50 ஆயிரம் கொடுத்திருக்கின்றனராம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications