சாதி மாறி காதலித்த மகள்... துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் - ஆணவக்கொலை
மேற்கு வங்க மாநிலத்தில் சாதி மாறி திருமணம் செய்த பெண்ணை பெற்றோர்களே வெட்டி கூறு போட்டு கங்கை ஆற்றில் வீசிய கொடுமை நடந்துள்ளது.
கொல்கத்தா: சாதி மாறி திருமணம் செய்பவர்களை ஆணவக் கொலை செய்வது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலம் மகேந்திரடோலா என்ற கிராமத்தில் பெற்றோர் எதிர்ப்புக்கு மீறி காதல் செய்த தனது 16 வயது மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்று உடலை கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகேந்திரடோலா கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தன் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அச்சிந்தியா மொண்டல் மீது காதல் ஏற்பட்டது. இந்த காதல் சம்பவம் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரிய வந்தது.

இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பஞ்சாயத்து போலீஸ் ஸ்டேசன் வரை போனது. இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து கண்டித்துள்ளனர்.
பெற்றோர்களின் கண்டிப்பையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.
இதையறிந்த பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை தன் மகளை அடித்து கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கட்டைப்பையில் வைத்து கங்கை ஆற்றில் வீசி விட்டனர்.
ஊர்மக்கள் தகவலின் பேரில் இதையறிந்த போலீசார் மாணவியின் வீட்டிற்கு சென்று, மாணவியின் அப்பா டிரின் மொண்டல் , அம்மா சுமதி மொண்டல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆணவக் கொலையாக இருக்கக்கூடும் என சந்தேகித்து இருவரையும் பூட்னி காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் இருவரையும் விசாரித்ததில் தனது மகள் பக்கத்து ஊர்க்காரனான அச்சிந்தா மொண்டல் என்பவரை காதலித்ததாகவும் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களின் பேச்சை கேட்காத காரணத்தால் மகளை கொலை செய்து ஆற்றில் வீசினோம் என கூறியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து ஐபிசி கண்காணிப்பாளரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மால்டோ மாவட்டம் போலீஸ் எஸ்பி அலோக் ராஜாரியா தெரிவித்தார். மேலும் ஆற்றிலிருந்து உடலை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், சடலத்தை கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் எஸ்பி அலோக் ராஜாரியா தெரிவித்தார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக்












Click it and Unblock the Notifications