ஆந்திராவில் திடீரென பரவும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா.. 7 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி பின்னணி
விஷாகப்பட்டினம்: இந்தியாவில் மெல்ல மெல்ல AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் AY.4.2 வகை கொரோனா பரவிய நிலையில் தற்போது ஆந்திர பிரதேசத்திலும் அதிக அளவில் கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யு.கேவில் கண்டறியப்பட்ட AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு வருகிறது.
இந்த நாடுகளில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கும் AY.4.2 கொரோனா வைரஸ் பரவி வருவதற்கும் முக்கியமான தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தியாவிலும் AY.4.2 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் இங்கும் கேஸ்கள் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

என்ன வைரஸ் இது
கொரோனா டெல்டா வகை (B.1.617.2) வைரஸ் உருமாற்றம் அடைந்து AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது. டெல்டாவில் இரண்டு புரோட்டின்கள் மாற்றம் அடைந்து இந்த புதிய வகை வைரஸ் உருவாக்கி உள்ளது. 222வது புரோட்டின் Aல் இருந்து V ஆக மாறி உள்ளது. அதேபோல் 145 புரோட்டின் Yல் இருந்து 5H ஆக மாறியுள்ளது. அதாவது A222V மற்றும் Y145H ஆகிய மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இதனால் இதை AY.4.2 வகை கொரோனா என்று அழைக்கிறார்கள்.

எப்படிப்பட்டது
இந்த வைரஸ் வேகமாக பரவ கூடியது என்று மட்டும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எவ்வளவு ஆபத்தானது? மரணங்களை ஏற்படுத்த கூடியதா? வேக்சினில் இருந்து தப்பிக்கும் ஆற்றல் இதற்கு இருக்கிறதா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இந்த புதிய வகை கொரோனா குறித்த ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் அதிகாரபூர்வ பெயர் VUI-21OCT-01. (அக்.1ல் கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video

ஆந்திர பிரதேசம்
இந்த நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் 7 பேருக்கு AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே 2 பேருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் என்று மொத்தமாக இந்தியாவில் 17 பேருக்கு AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள்ளது.5 மாநிலங்களில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவது தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. யுகேவில் இதனால் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் இதன் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் இந்த AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பரவும்
இந்த AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டாவை விட வேகமாக பரவும் திறன் கொண்டது என்று மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதன் பாதிப்பு திறன் இன்னும் கண்டறியப்படவில்லை. இப்போதுதான் AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இன்னும் ஆராய்ச்சிகள் முடியவில்லை. இதனால் இதை பற்றி இப்போதே கவலைப்பட வேண்டாம் ஆந்திர பிரதேச சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications