இந்தியாவில் கொரோனா 4வது அலை மே மாதம் தாக்கும்.. கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் பரபர தகவல்
இந்தியாவில் கொரோனா நான்காவது அலை மே மாதத்தில் பரவும் என்றும் 6 வார காலத்திற்கு தீவிரமாக பாதிப்பு இருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
லுதியானா: கொரோனா மூன்றாவது அலை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நான்காவது அலை மே மாதத்தில் பரவும் என்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டாக அலை அலையாக வீசி வருகிறது.
உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் தப்பிய இந்தியா, இரண்டாவது அலையில் கடுமையான பாதிப்பை சந்தித்தது. பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

கொரோனா 4வது அலை
ஓமிக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவிய போதும் அதிக உயிரிழப்பு ஏற்படவில்லை.
தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் உருவாகும் என்று கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர்.

எப்போது பரவும்
கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில் நான்காவது அலையின் தீவிரமானது புதிய மாறுபாடுகளின் தோற்றம் மற்றும் பூஸ்டர் டோஸ் உட்பட மக்களின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையை பொறுத்தது என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புள்ளிவிவரம் கடந்த பிப்ரவரி 24 அன்று MedRxiv ப்ரீபிரிண்ட் சர்வரில் வெளியிடப்பட்டது. அதில் கொரோனாவின் 4வது அலை ஆகஸ்ட் 15 முதல் 31 வரை உச்சத்தை எட்டும், அதன் பிறகு குறையும் என கணித்துள்ளனர்.

மே மாதமே கொரோனா 4வது அலை வீசும்
இந்த ஆய்வுமுடிவுகள் ஒருபக்கம் இருக்க லூதியானாவில் உள்ள கிரிஸ்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மே மாதமே கொரோனா நான்காவது அலை வீசக்கூடும் என கணித்துள்ளது. பி.ஏ.1 ஓமிக்ரான் வகை வைரஸ் பாதிப்புகள் மூன்றாவது அலையாக பரவியது. கொரோனா நான்காவது அலையில் புதிய வேரியண்ட் பி.ஏ 2 எனப்படும் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கும் இது மே மாதத்தில் தொடங்கி ஜூன் இறுதி வரை நீடிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பாதிப்பு என்னென்ன
இந்த வைரஸ் பாதிப்பு பரவியவர்களுக்கு பொதுவாக தொண்டையில் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெல்டா வைரஸ் பாதிப்பு போல நுரையீரலையும் தாக்கும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு போல இந்த வைரஸ் தீவிரமாக பரவும் எனவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தடுப்பூசி அவசியம்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் அதிகரித்துக்கொண்டால் மட்டுமே மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனாவைக் கொல்லும் பேராயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் மக்கள் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டு கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் எனவும் கிறிஸ்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவர் சாமுவேல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications