பீடா கடைகளில் ஜோரா நடந்த கிரிக்கெட் சூதாட்டம்: 8 பேர் கைது, ரூ.14 லட்சம் பறிமுதல்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தியது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் நகரில் உள்ள தூல்பேட், பேகம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடைக்கு வரும் சூதாட்டக்காரர்களுக்கு பல விதிமுறைகள் உள்ளதாம்.

யாராவது புதிதாக ஒருவர் சூதாட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினால் அவரை பழைய வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமாம். மேலும் சூதாட்டத்தில் பங்கேற்க ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை டெபாசிட் செய்ய வேண்டுமாம். பீடா கடைகளில் ஹாமில்டன் நகரில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் பற்றியும் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தியா வெற்றி பெற்றால் செலுத்திய தொகை 2 மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும் என்றும், அயர்லாந்து வெற்றி பெற்றால் அந்த தொகை 5 மடங்காக திருப்பிக் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓவர்களில் அடிக்கப்படும் ரன்கள், வீரர்கள் 50, 100 ரன்கள் எடுப்பது பற்றியும் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் பெரிய தொகைகள் கைமாறியுள்ளது.
இந்நிலையில் தான் போலீசார் பீடா கடைகளில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்திய சுப்பிரமணியம் என்கிற முக்கிய நபர் உள்பட 8 பேரை புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 14 லட்சம் ரொக்கம், செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications